சந்தனம் வேறு பெயர்கள்
மனிதனுக்கு வைக்கும் பெயர்களில் பல பெயர்கள் இருக்கிறது, அதாவது வீட்டில் ஒரு பெயரை வைத்து கூப்பிடுவார்கள், சான்றிதழில் ஒரு பெயரை வைத்திருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் நண்பர்கள் ஒரு பெயரை வைத்து அழைப்பார்கள். இப்படி இருக்கும் போது நாம் பேசும் தமிழ் வார்த்தைகளில் மட்டும் ஒரு வார்த்தைகளா இருக்கும்.
நாம் பேசும் சொற்கள் மற்றும் பொருட்கள் போன்றவற்றிற்கு ஒரு வார்த்தைகள் மட்டும் இருக்காது, பல வார்த்தைங்கள் இருக்கும் அதனை பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டும். நம் பதிவில் ஒரு சொல் தரும் தரும் பல சொற்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சந்தனம் என்பதற்கான வேறு பெயர்களை பற்றி அறிந்து கொள்வோம்.
சந்தனம் என்றால் என்ன.?
சந்தனம் என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம் ஆகும் . இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியாவாக இருக்கிறது.
சந்தனம் என்பது மரத்திலிருந்து வர கூடியது, இவை வாசனை மிக்கவையாக இருக்கும். மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.
இந்த சந்தனத்தை பயன்படுத்தி நெற்றியில் பொட்டாக வைத்து கொள்வார்கள், மேலும் கடவுளுக்கும் பொட்டாக வைத்து அதன் மேலே குங்குமத்தை வைப்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
இந்த சந்தனத்தை பேஸ்ட்டாக குழைத்து முகத்தில் தொடர்ந்து அப்பளை செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.
சந்தனம் வேறு பெயர்கள்:
- முருகுசத்தம்
- சாந்தம்
- சாந்து
- ஆரம்
சந்தனம் வகைகள்:
இதில் மூன்று வகையான வகைகள் காணப்படுகிறது, வெள்ளை, மஞ்சள், சிவப்பு என மூன்று வகைகள் உள்ளது.
மணம் மிகுந்த எண்ணெய் எடுக்கவும் வாசனைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படும் மரமாக இருக்கிறது. மேலும் சந்தனத் தைலம், சந்தனக் கட்டை, சந்தனச் சிலை போன்றவை தயாரிக்க பயன்படுகிறது.
சந்தனம் In English:
சந்தனத்தை ஆங்கிலத்தில் Sandalwood என்று அழைப்பார்கள்.
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |