வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சந்தேகம் வேறு சொல்

Updated On: March 28, 2025 4:05 PM
Follow Us:
santhegam veru sol
---Advertisement---
Advertisement

சந்தேகம் வேறு சொல் 

நம் தாய்நாட்டில் பேசப்படும் சொற்களை வேறு ஊரில் வேறு மாதிரியாக பேசுவார்கள். எடுத்துக்காட்டாக நம் ஊரில் புளிக்குழம்பு என்று கூறுவோம், அதனை சென்னையில் காரக்குழம்பு என்று அழைப்பார்கள். அது மதுரை பாஷை, கோயம்புத்தூர் பாஷை, சென்னை பாஷை என்று வேறுபடும். ஆனால் பேசுவது தமிழ் மொழி தான் அதனை பேசும் விதம் தான் வெவ்வேறு மாதிரி இருக்கும்.

பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழி தாய்மொழியாக இருக்கிறது. நம்முடைய நாட்டில் தாய்மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. இந்த தமிழ் மொழியில் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கிறது. இந்த அர்த்தங்களை அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. நம்முடைய பதிவில் அர்த்தங்கள் மற்றும் வேறு சொற்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சந்தேகம் என்பதற்கான வேறு சொற்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சந்தேகம் என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

சந்தேகம் என்றால் என்ன.?

சந்தேகம் என்பது ஒருவரின் மீது வைத்துள்ள நம்பிக்கை இல்லா தன்மையை குறிக்கிறது. மனிதனுக்கு பல விதங்களில் சந்தேகம் ஏற்படலாம். அவை ஒரு பொருளின் மீது கூட ஏற்படலாம்.

அதாவது பால் வாங்குகிறோம் என்றால், இந்த பால் ஆனது சுத்தமான பாலா, தரமான பல என்ற யோசனை வருவதே சந்தேகம் என்று கூறலாம். இந்த சந்தேகமானது ஒரு மனிதரிடத்தில் எழுகின்றபோது மனமானது வேறுபட்ட கருத்துக்களை கொண்டு வேறுபட்டு காணப்படும். இந்த சந்தேகம் வந்தால் எதிலும் சரியான முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும். பொருட்களின் மீது சந்தேகம் வந்தால் பிரச்சனையில்லை, ஆனால் மனிதர்களிடத்தில் சந்தேகம் வந்தால் உறவுகளுக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியாது. மனதிற்குள் சந்தேகத்தை வைத்து கொண்டு அவர்களிடம் நல்லா பேச முடியாது. இந்த உணர்வானது கொடுமையாக இருக்கும். சந்தேகம் என்பது ஒரு வியாதி என்றே கூறலாம்.

உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்தால் அதனை உடனே கேட்டு விடுங்கள். மனத்துக்குள்ளையே வைத்துகொள்ளாதீர்கள்.

எடுத்துக்காட்டு:

  • சுபாஷினி என்னை சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கிறாள்.
  • பால்காரர் கொடுக்கும் பல் ஆனது நல்ல பாலா இல்லை தண்ணீர் கலந்த பாலா என்ற சந்தேகம் இருக்கிறது.

சிறுவன் என்பதை வேறு எவ்வாறெல்லாம் குறிப்பிடுவார்கள் தெரியுமா..?

சந்தேகம் வேறு பெயர்கள்:

சந்தேகம் என்ற வார்த்தையை பல சொற்களால் அழைக்கலாம், அவை எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

  • ஐயம்
  • அயிர்ப்பு
  • ஐயுறவு
  • தயக்கம்

சந்தேகம் in English:

சந்தேகம் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எப்படி கூறலாம் என்று அறிந்து கொள்வோம்.

  • Doubt
  • Suspicion
  • Ambiguity
  • Diffidence
  • Misgiving
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now