சபதம் என்பதற்கான வேறு சொல்..!

Advertisement

சபதம் வேறு சொல் | Sabatham Meaning in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சபதம் என்பதற்கான வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். பொதுவாக, தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தமும் அதனை குறிக்கும் வேறு சொல் என்பதும் இருக்கும். இதுபோன்ற வேறு சொல் பற்றிய கேள்விகள் தேர்வுகளில் கேட்கப்படும்.

ஆகையால், நாம் அனைவருமே தமிழில் உள்ள ஒவ்வொரு சொளுக்குமான வேறு சொல் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் பலவேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொல் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சபதம் என்பதற்கான வேறு சொல் பற்றி விவரித்துள்ளோம்.

களைப்பு என்பதன் வேறு சொல் என்ன.?

சபதம் என்றால் என்ன.? சபதம் பொருள்:

சபதம் என்பது ஒரு வாக்குறுதியை குறிக்கிறது. அதாவது, சபதம் என்றால், ஒரு நபர் எதையாவது செய்ய அல்லது செய்யாமல் இருக்க கொடுக்க வேண்டிய வாக்குறுதி அல்லது தீர்மானம் ஆகும்.

ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப சபதம் கொடுக்கப்படும். மிகவும் பொருத்தமான சூழ்நிலையில் மிகவும் பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தி கடமையை ஏற்றுக்கொள்வதாகும். அதுமட்டுமில்லாமல், சபதம் என்பதை பந்தயம் என்று கூட கூறலாம். எடுத்துக்காட்டாக, நான் இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீருவேன் என்று ஒருவரிடம் சவால் விடுவதை சபதம் என்று பொருள் கொள்ளலாம்.

சபதத்தில் பல வகைகள் உள்ளது. மதச் சபதம், சட்டச் சபதம், அரசியல் சபதம், தனிப்பட்ட சபதம்  என்பதாகும்.

பாஞ்சாலி சபதம் நூல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சபதம் வேறு சொல்:

  • சூளுரை
  • சத்தியம்
  • நேர்த்தி
  • பந்தயம்
  • பிரதிஞ்ஞை
  • உறுதிமொழி

மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் சபதம் என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் ஆகும்.

சபதம் அடங்கிய வாக்கியம்:

  • உன் சபதம் நிறைவேறாது.
  • சிவகாமியின் சபதம்.
  • உன்னை நான் போட்டியில் வீழ்த்தி வெற்றி பெறுவேன் என்று சபதம் செய்கிறேன்.
  • உன் சபதம் தோற்றுப்போகும்.

இடைஞ்சல் என்பதன் வேறு சொல் என்ன.?

சபதம் in English Word:

சபதம் என்பதை ஆங்கிலத்தில் Vow என்று கூறுவார்கள்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement