சபை வேறு சொல் | Sabai Veru Peyargal in Tamil
பொதுவாக ஒரு செயலானது எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடந்தால் அதனை நாம் அவ்வளவாக கண்டுக்கொள்ள மாட்டோம். அதுவே 4-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக ஒரு இடத்தில் சேர்ந்து இருந்தால் அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டிய ஆர்வம் தான் அதிகமாக காணப்படும். ஏனென்றால் ஒரு இடத்தில் கூட்டமாக இருந்தால் என்னவோ அந்த இடத்தில் பேசப்படுகிறது என்றும் அல்லது ஏதோ ஒரு நிகழ்வு அங்கு நடக்கிறது என்பதாக தான் நாம் அனைவரும் நினைப்போம். அப்படி பார்த்தால் இவ்வாறு 4-ற்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடுவதை கூட்டம், சபை என்று எல்லாம் சொல்லும். அந்த வகையில் இந்த இரண்டும் இல்லாமல் சபை என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்பதை தான் இன்று பார்க்கப்போகிறோம்.
சபை என்பதன் இன்னொரு சொல்:
சபை என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் அவை மற்றும் மன்றம் என்பது ஆகும்.
சபை என்றால் என்ன..?
ஏதோ ஒரு குறிப்பிட்ட செயலுக்காகவோ அல்லது ஒரு செயலின் நோக்கத்திற்காகவோ பல ஜாம்பவான்கள் ஒன்றாக சேர்ந்து இயங்கும் ஒரு அமைப்பே சபை எனப்படும். இத்தகைய சபை ஆனது மக்கள் கலந்து கொள்ளக்கூடிய ஒன்றாகவும், பொதுவான ஒரு இடத்தில் நடைபெறக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகவும் இருக்கிறது.
எடுத்துக்காட்டாக:
இன்று சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாலை 6 மணியளவில் சபைக்கூட்டம் நடைபெறுவதனால் அங்குள்ள மக்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்.
சபை Meaning in English:
சபை என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச்சொல் Council என்பது ஆகும்.
ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |