சாட்டை வேறு சொல்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சாட்டை என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைத்து உயிருக்கும் நிச்சயம் ஒரு பெயர் இருக்கும். மனிதருக்கு பல பெயர்கள் இருக்கும், அதாவது சான்றிதலுக்காக ஒரு பெயர் வைத்திருப்பார்கள், வீட்டில் செல்லமாக அழைப்பதற்கு ஒரு பெயர் வைத்திருப்பார்கள். நண்பர்கள் ஒரு பெயரில் அழைப்பார்கள். அது போல தமிழ் உள்ள வார்த்தைகளுக்கு எப்படி பல அர்த்தங்கள் உள்ளதோ அது போல வார்த்தைகளையும் பல சொற்களால் கூறலாம். எடுத்துக்காட்டாகம் ஆதாரம் என்பதை அஸ்திவாரம், முட்டு என்ற வார்த்தைகளால் கூட அழைக்கலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் சாட்டை என்பதை எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று அறிந்து கொள்வோம்.
சாட்டை என்றால் என்ன.?
- சாட்டை பண்டைய காலத்திலிருந்து பயன்படும் ஒரு பொருளாக இருக்கிறது. அதாவது ஒருவனை பயமுறுத்தவும், மிருகங்களை அச்சப்படுத்தவும் சாட்டை பயன்படுகிறது.
- பெரும்பாலும் இந்த சாட்டையை குதிரை ஓட்டுவதற்கு பயன்படுகிறது. இந்த சாட்டையை பயன்படுத்தி குதிரையின் வேகத்தை குறைக்கவும், திசையை மாற்றுவதற்கும் பயன்படுகிறது.
- இந்த சாட்டையை பயன்படுத்தி அடிப்பதால் வலி தாங்காமல் குதிரையானது நாம் சொன்ன சொல்லை கேட்டு நடக்கிறது. வலியுடன் கூடிய பயம் ஏற்பட்டு சொன்ன சொல்லை கேட்கிறது.
- குதிரை ஓட்டுவதற்கு மட்டுமில்லை மாட்டு வண்டி ஓட்டுவதற்கு சாட்டை பயன்படுகிறது.
சாட்டை வேறு சொல்:
சாட்டை என்பதை சவுக்கு, கசை என்ற வார்த்தைகளால் கூட கூறலாம். இது மக்களை அல்லது விலங்குகளை அச்சுறுத்த ஒரு கருவியாக இருக்கிறது. பெரும்பாலான சாட்டைகள் விலங்குகளை அடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
தொடர்புடைய பதிவுகள் 👇 |
ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. |
கதிரவன் வேறு பெயர்கள்.. |
இதுபோன்று பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |