சாம்பல் வேறு சொல்

Advertisement

Sambal Veru Sol in Tamil

நம்முடைய நாட்டில் தாய்மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. இந்த தமிழ் மொழியில் பல வார்த்தைகள் இருக்கிறது. இந்த வார்த்தைகள் அனைத்திற்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. ஆனால் நமக்கு தெரிந்த அர்த்தங்களை மட்டும் நினைத்து பேசுவோம். மற்ற மொழிகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ளா விட்டாலும் நம்முடைய தாய்மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

அது போல இந்த வார்த்தைகளுக்கு பல சொற்கள் இருக்கும், அதனையும் அறிந்து கொள்ள வேண்டும், அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் ஒரு சொல் தரும் பல சொற்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சாம்பல் என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

சாம்பல் என்றால் என்ன.?

அடுப்பில் விறகு வைத்து பயன்படுத்துவார்கள், விறகானது எரிந்து முடிந்த பிறகு அவை வெறும் தூளாக தான் இருக்கும். இதனை தான் சாம்பல் என்கிறோம். அதாவது ஒரு பொருளையோ அல்லது கட்டையையோ எரித்த பிறகு கடைசியாக கிடைப்பது தான் சாம்பல் என்கிறோம்.

இது, ஒரு பொருள் எரிக்கப்பட்ட பின் உண்டாகும் அனைத்து நீர்மமற்ற, வாயுவல்லாத எச்சங்கள் எனக் கூறப்படுகிறது. பகுப்பாய்வு வேதியியல் படி, இரசாயன மாதிரிகளின் கனிம மற்றும் உலோக உள்ளடக்கத்தை ஆய்வு செய்ய பயன்படுகிறது. மேலும்  முழுமையான எரித்த பிறகு கிடைக்கும் வாயு அல்லாத, திரவம் அல்லாத எச்சம்.

மேலும், மனிதன் இறந்த பிறகு எரிப்பார்கள், இந்த உடம்பானது எரிந்து முடிந்த பிறகு கடைசியாக கிடைப்பது சாம்பல் தான்.

மேலும் மாட்டிலிருந்து பெறப்படும் சாணத்தை ராட்டியாக தட்டி கொள்வார்கள், பிறகு இதனை காய வைத்து எரிப்பார்கள். இதனை எரித்த பிறகு சாம்பல் கிடைக்கும். இதனை நெற்றியில் விபூதியாக பயன்படுத்தினார்கள். மேலும், இந்த சாம்பலை, பாத்திரத்தை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தினார்கள்.

இந்த சாம்பலுக்கு பல பெயர்கள் இருக்கிறது, அதனை பற்றி கீழே காண்போம்.

சாம்பல் வேறு பெயர்கள்:

  • எரி நீறு
  • சாம்பர்
  • எரிபட்டசாணம்
  • அஸ்தி

மேலே கூறப்பட்டுள்ள பெயர்களால் சாம்பலை அழைக்கலாம்.

விகடகவி வேறு சொல்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement