சிரிப்பு வேறு சொல்
ஹலோ நண்பர்களே..! பொதுவாக இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் சந்தோசம் என்பது இருக்கும். அதாவது மனிதனாக இருந்தாலும் சரி மற்ற ஜீவராசிகளாக இருந்தாலும் சரி, அனைவருக்குமே சந்தோசம் என்ற ஓன்று கட்டாயம் இருக்கும். அந்த சந்தோசத்தை மனிதர்களின் சிரிப்பில் காணலாம். ஆனால் மற்ற ஜீவராசிகளிடம் காண முடியாது. ஆனாலும் சிரிப்பு, சந்தோஷம், மகிழ்ச்சி, இன்பம் துன்பம், கவலை அனைத்து உணர்வுகளும் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. சரி சிரிப்பு என்பதை வேறு எப்படியெல்லாம் சொல்லலாம் தெரியுமா..? வாங்க தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சிரிப்பு என்பதற்கு வேறு பெயர்கள் என்ன..?
பொதுவாக நம் அனைவருக்குமே ஒன்றுக்கு இரண்டு பெயர்கள் கட்டாயம் இருக்கும். அதுவும் வீட்டில் ஒரு பெயரை சொல்லியும், வெளியில் ஒரு பெயரை சொல்லியும் அழைப்பார்கள். நாம் இதுவரையில் மனிதர்களுக்கு மட்டும் தான் இரண்டு மூன்று பெயர்கள் இருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கின்றோம்.
ஆனால் நாம் தினமும் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் பல பெயர்கள் இருக்கிறது. அது என்னவென்று தினமும் நம் பதிவில் தெரிந்து கொண்டு வருகின்றோம். அதுபோல இன்று சிரிப்பு என்பதை வேறு எப்படி எல்லாம் சொல்லி அழைக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.
சச்சரவு என்பதற்கு இன்னொரு சொல் என்ன தெரியுமா
- சிரிப்பு என்பது மனிதனோடு பிறந்த ஓர் உணர்வின் வெளிப்பாடு ஆகும். சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் அசைகின்றன.
- உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன.
- அதுமட்டுமில்லாமல் முகத்திலுள்ள தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று ஆரோக்கியத்தைத் தருகின்றன.
- சிரிக்கும் போது ஆழமாக மூச்சை இழுக்க முடிவதால் உடல் கூடிய ஆக்சிஜனை உள்வாங்கிக் கொள்கிறது. நோய்எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது.
சிரிப்பு வேறு சொல்:
- இளநகை
- குமிண்சிரிப்பு
- குறுநகை
- குறுஞ்சிரிப்பு
- சிறுநகை
- செல்லச்சிரிப்பு
- புன்னகை
- புன்முறுவல்
- முகிழ்நகை
- மூரல்
ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |