வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சிவிகை வேறு சொல்

Updated On: January 24, 2025 3:43 PM
Follow Us:
sivigai veru sol in tamil
---Advertisement---
Advertisement

சிவிகை வேறு சொல் | சிவிகை Meaning in Tamil

நம் தாய்நாட்டில் பேசப்படும் சொற்களை வேறு ஊரில் வேறு மாதிரியாக பேசுவார்கள். எடுத்துக்காட்டாக நம் ஊரில் புளிக்குழம்பு என்று கூறுவோம், அதனை சென்னையில் காரக்குழம்பு என்று அழைப்பார்கள். அது மதுரை பாஷை, கோயம்புத்தூர் பாஷை, சென்னை பாஷை என்று வேறுபடும்.

ஆனால் பேசுவது தமிழ் மொழி தான் அதனை பேசும் விதம் தான் வெவ்வேறு மாதிரி இருக்கும்.ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தம் இருப்பது போல சொற்களும் நிறைய இருக்கின்றது. அதனை அறிந்து வைத்திருப்பது அவசியமானது. ஏனென்றால் அரசு பொது தேர்வுகளில் இது மாதிரியான வினாக்கள் நிறைய கேட்கிறார்கள். அதனால் நம்முடைய பதிவில் சிவிகை என்ற வார்த்தைக்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

சிவிகை என்றால் என்ன.? | சிவிகை என்பதன் பொருள்

pallakku veru sol

சிவிகை என்பது மனிதர்கள் சுமந்து செல்லும் ஒரு வகை வாகனம். பல்லக்குகளில் பல வகைகள் உள்ளன. வரலாற்றில் பல நாடுகளில் பல வகைப் பல்லக்குகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். பல்லக்குகளில் ஒருவரோ ஒரு சிலரோ அமர்ந்து கொண்டோ சாய்ந்து கொண்டோ பயணிக்க முடியும்.

ஒருவர் அல்லது இருவர் அமர்ந்துகொள்ள நால்வர் பல்லாக்குக் கோல்களை தங்கள் தோள்களில் சுமந்து செல்லும் ஊர்தி. பல்லாக்குத் சுமப்போர் பல்லக்குத் தூக்குவோர் என்று அழைக்கப்பட்டனர்.

மன்னர்கள் இருந்த காலத்தில் கைகளால் அரசர்கள், அரசிகள், நிலக்கிழார்கள் என குமுகாயதில் பெரும் பதவி வகிர்த்தவர்களை தூக்கிச் செல்ல பயன்பட்ட ஓர் கூடை வடிவிலான ஒன்று தான் பல்லக்கு.

இந்த பல்லக்கில் பல வகைகள் இருக்கிறது. அவை முத்துப் பல்லாக்கு, இரத்தினப் பல்லாக்கு, பூ பல்லாக்கு என்று பல வகைப் பல்லக்குகள் உள்ளன.

சிவிகை வேறு சொல் | Sivigai Veru Sol in Tamil | Pallakku Veru Sol in Tamil

  • சிவிகை
  • ஆந்தோணி
  • தண்டிகை
  • அந்தளம்
  • கச்சு

என்ற பெயர்களும் இருக்கிறது.

சிவிகை திருக்குறள்:

இந்த சிவிகையை பற்றி திருவள்ளுவர் குறளின் மூலம் கூறியிருக்கிறார். அதனை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா. அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் என்பது விளக்கமாக இருக்கிறது.

பல்லக்கு in English:

பல்லக்கு என்பதனை palanquin என்று ஆங்கிலத்தில் அழைக்கலாம்.

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now