சுடுகாடு வேறு பெயர்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சுடுகாடு என்பதன் வேறு பெயர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. சுடுகாடு என்று சொன்னாலே நம்மில் பலபேருக்கு பயமாகத்தான் இருக்கும். சுடுகாடு என்றால் இறந்தவர்களை புதைக்கும் அல்லது எரிக்கும் இடம் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், சுடுகாடு என்ற பெயரை தவிர்த்து சுடுகாட்டை வேறு என்ன பெயரில் குறிப்பிடலாம் என்று தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் அமையும்.
தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேறு சொல் என்பது இருக்கும். அந்த சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லினை பயன்படுத்தி கூறலாம். இவ்வாறாக வேறு பெயர்கள் உள்ள சொற்கள் அதிகமாக உள்ளது. வேறு சொற்கள் பற்றி தேர்வுகளில் கேட்டு இருப்பதை நாம் அறிவோம். ஓகே வாருங்கள் சுடுகாடு என்பதை வேறு எந்த பெயர்களில் கூறலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
கனவில் சுடுகாடு வந்தால் என்ன பலன்
சுடுகாடு என்றால் என்ன.?
என்பது இறந்தவர்களை குழிதோண்டி புதைக்கும் ஒரு நிலப்பகுதி ஆகும். மக்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப சமயம் மற்றும் இனம் சார்ந்த தனித்தனி இடங்களில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இடங்களில் இறந்தவர்களை அடக்க்கம் செய்து இறுதி சடங்கு செய்வார்கள். கிறிஸ்தவ மதத்தில் இறந்தவர்களை புதைக்கும் இடத்தை கல்லறைத் தோட்டம் என்று கூறுவார்கள். இஸ்லாமிய மதத்தில் இறந்தவர்களை புதைக்கும் இடத்தை கபஸ்தான் என்று கூறுவார்கள்.
மயான அமைதி என்று பலபேர் கூறி கேட்டு இருப்போம். சுடுகாடு அந்த அளவிற்கு அமைதியாக இருக்கும். இதனால், தான் பேச்சு வழக்கில் நாம் மயான அமைதி என்று கூறுவோம். சுடுகாடு அல்லது மயானம் என்றாலே அனைவருக்கும் ஒரு பயம், ஒரு சிறிய தயக்கம் இருக்கும். அந்த இடம் இருக்கும் இடத்திற்கும் செல்ல மாட்டோம். ஆனால், ஒருநாள் இங்குதான் வருவோம் என்ற எண்ணமும் பயமும் நம்மில் யாருக்குமே கிடையாது.
சுடுகாடு என்பதன் வேறு பெயர்கள்:
- இடுகாடு
- மயானம்
- சுடுகாடு
- சுடலை
- மசானம்
சுடுகாடு பழமொழி:
“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்”
சுடுகாடு வேறு பெயர்கள் in English:
- Crematorium
- Funeral pyre
- Cremation ground
- Grave yard
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |