சூழ்ச்சி வேறு சொல்
நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும்.
அதனால் ஒரு சொல்லை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த சொல்லை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான சூழ்ச்சி என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.
சூழ்ச்சி என்றால் என்ன..?
இந்த சூழ்ச்சி என்பது ஒரு நபர் மற்றொரு நபரிடம் தந்திரமான ஒரு நிகழ்வை நடத்தி அதன் மூலம் தனது தேவையை நிறைவேற்றி கொள்வது ஆகும். அதாவது சூழ்ச்சி என்பது உள்ளொன்று வைத்து அதற்கு மாறாக செயல்படுவதை குறிக்கின்றது.
சூழ்ச்சி குணப் பண்பு ஒரு மனிதனிடையே காணப்படுமாயின் அது அழிவின் பாதையிலே அவர்களை இட்டுச் செல்லும். இப்பொழுது இந்த சூழ்ச்சி என்பதை நமது தமிழ் மொழியில் வேறு எப்படி எல்லாம் குறிப்பிடப்படுகிறது என்பதை பற்றி இங்கு காணலாம் வாங்க.
சூழ்ச்சி வேறு சொல்:
சூழ்ச்சி என்பதை,
- ஏமாற்றுதல்
- வஞ்சகம்
- தந்திரம்
- சதி
- கபடம்
- பொய்வேடம்
- வஞ்சனை போன்ற வேறு சொற்களை பயன்படுத்தி தான் தமிழ் மொழியில் சூழ்ச்சி என்பதை குறிப்பிடுவார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |