Seiyul Veru Peyargal in Tamil
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். நம் வாழ்க்கையில் பலருக்கும் தினம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதுபோன்ற எண்ணம் உங்களிடமும் இருக்கிறதா..? அப்போ உங்களுக்கு எங்கள் பொதுநலம் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
சரி பொதுவாக நாம் படிக்கும் காலத்தில் இந்த வார்த்தையை அதிகம் கேள்விப்பட்டிருப்போம். அதாவது செய்யுள் என்ற வார்த்தையை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். செய்யுள் என்பது பாடல் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதற்கு இன்னும் நிறைய பெயர்கள் இருக்கின்றன. அதை பற்றி இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க.
சக்கரம் என்பதை வேறு எப்படிஎல்லாம் சொல்லலாம்..?
செய்யுள் என்றால் என்ன..?
தமிழ் இலக்கணத்தில் செய்யுள் என்பது இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. செய்யுள் ஒன்று எவ்வாறு அமைய வேண்டுமென யாப்பு கூறுகிறது. அதாவது யாப்பு இலக்கணத்தின் விதிகளுக்கு அமைப்பாகவே செய்யுள் ஒன்று உருவாகிறது.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், செய்யுள் என்பது எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவது ஆகும். செய்யப்படுவதனால், இது செய்யுள் எனப்படுகின்றது.
செய்யுள் வகைகள் என்ன:
செய்யுள் பா என்ற சொல்லாலும் வழங்கப்படுகிறது. அதாவது பா என்பது நான்கு வகைகளாக இருக்கிறது. அவை,
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
இதுபோல செய்யுள் என்பதற்கு வேறு பெயர்களும் இருக்கின்றன. அவற்றை பற்றி இப்போது பார்க்கலாம்.
செய்யுள் உறுப்புக்கள்:
- மாத்திரை
- எழுத்து
- அசை
- சீர்
- அடி
- யாப்பு
- மரபு
- தூக்கு
- தொடை
- நோக்கு
- பா
- அளவியல்
- திணை
- கைகோள்
- கண்டோர்
- கேட்போர்
- இடம்
- காலம்
- பயன்
- மெய்ப்பாடு
- எச்சம்
- முன்னம்
- பொருள்
- துறை,
- மாட்டு
- வண்ணம்
- அம்மை
- அழகு
- தொன்மை
- தோல்
- விருந்து
- இயைபு
- புலன்
- இழை
செய்யுள் வேறு சொல்:
- பாட்டு
- உரை
- நூல்
- பிசி
- முதுமொழி
- மந்திரம்
- பண்ணத்தி
- தூக்கு
- தொடர்
என்று பல பெயர்களை தருகிறது.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |