செருக்கு என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

செருக்கு வேறு சொல்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் செருக்கு என்றால் என்ன.? செருக்கு என்ற சொல்லிற்கான வேறு சொல் என்ன.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். செருக்கு என்ற சொல் பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், செருக்கு என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் நாம்,  செருக்கு என்ற சொல்லிற்கு வேறு ஏதேனும் வேறு சொற்கள் உள்ளதா என்று கேட்டிருப்போம். அப்படி நீங்கள் செருக்கு என்பதன் அர்த்தமும் அதனை குறிக்கும் வேறு சொற்கள் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இப்பதிவில் செருக்கு என்பதன் தமிழ் அர்த்தமும், அதன் வேறு சொற்கள் பற்றியும் பின்வருமாறு விவரித்துள்ளோம். நம் பொதுநலம் பதிவில் பல்வேறு பயனுள்ள பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். எனவே, நீங்கள் வேறு சொற்கள் பற்றி அறிந்துக்கொள்ள விரும்பினால் பொதுநலம் வலைத்தளத்தை பார்வையிடுங்கள்.

சவுகரியம் என்பதன் வேறு சொல்.!

செருக்கு என்பதன் பொருள் | செருக்கு Meaning in Tamil:

செருக்கு என்பது மனிதர்களிடையே காணப்படும் ஒரு பண்பு ஆகும். அதாவது, மனிதர்களிடையே காணப்படும் பண்புகளில் அழிவிற்கு கொண்டு செல்லும் ஓர் பண்பே செருக்கு ஆகும். தன்னை உயர்ந்தவர்களாக கருதிக்கொண்டு மற்றவர்களை இழிவாக பார்த்தலும் பேசுதலும் செருக்கு ஆகும். செருக்கு குணமுடைய ஒருவர் எப்போதும் வாழ்வில் தோல்வியை மட்டுமே சந்திக்க நேரிடும். அந்த அளவிற்கு செருக்கு என்பது மிகவும் தீங்கான ஒன்று. மன நிம்மதியோடு வாழ வேண்டுமானால், மனிதன் செருக்கு என்ற குணம் இல்லாமல் இருக்க வேண்டும்.

செருக்கு பற்றிய திருக்குறள்:

“செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து”

இத்திருக்குறள் ஆனது, ஆணவமும் கோபமும் சிறுமைக் குணமும் இல்லாதவருடைய வளர்ச்சியே அனைவராலும் மதிக்கப்படும் மற்றும் பெருமையுடையது என்பதை குறிக்கிறது.

பராமரிப்பு என்பதன் வேறு சொல் என்ன.?

செருக்கு என்பதன் வேறு சொல்:

  • ஆணவம்
  • கர்வம்
  • திமிர்
  • அகங்காரம்
  • மமதை
  • பெருமிதம்
  • அகந்தை 
  • தலைக்கனம் 
  • இறுமாப்பு 

மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் செருக்கு என்பதன் வேறு சொற்கள் ஆகும்.

செருக்கு Meaning in English:

செருக்கு என்பதை ஆங்கிலத்தில் Arrogance என்று கூறுவார்கள்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement