செல்வம் வேறு சொல் | செல்வம் வேறு பெயர்கள் | Selvam Veru Sol in Tamil
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் கல்வி அறிவு மட்டும் நமக்கு இருந்தால் போதும் அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். அப்படி பார்த்தால் கல்வி அறிவு என்பது நமக்கு முக்கியமானதாக இருந்தாலும் கூட இவற்றிற்கு அப்பால் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய எண்ணற்ற விஷயங்கள் இருக்கிறது. அதாவது அன்றாடம் நாம் பேசும் மற்றும் எழுதும் வார்த்தைகள் ஏராளமாக இருந்தாலும் கூட அதில் சில அடிப்படையான விஷயங்கள் கூட தெரியாமல் இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் ஒரு வார்த்தை பல அர்த்தங்களை தரும் விதமாகவும், பல பெயர்களை கொண்டுள்ளதாகவும் காணப்படும். இதன் படி பார்க்கையில் ஒவ்வொருவரும் அவர் அவருக்கு பிடித்த மாதிரியான சொற்களை பேசவும் எழுதுவும் செய்வார்கள். அந்த வகையில் நாம் அனைத்து விதமான சொற்களின் பெயர்களை தெரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட சில சொற்களின் பெயர்களை தெரிந்துகொள்வது நல்லது. ஆகையால் இன்று செல்வம் சென்ற சொல்லின் வேறு பெயர்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!
செல்வம் வேறு சொல் இன் தமிழ் | Selvam Other Words in Tamil
செல்வம் என்ற சொல்லிற்கான வேறு பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- சொத்து
- பணம்
- பொருள்
- ஐசுவரியம்
செல்வம் என்றால் என்ன..?
ஒரு மனிதன் அல்லது குடும்பத்தில் சிறிது சிறிதாக சேகரிக்கப்பட்ட இருப்பே செல்வம் எனப்படும். இத்தகைய செல்வங்களை நாமும் வைத்து கொள்ளலாம், இல்லத்தரவர்களுக்கும் வழங்கலாம். எனவே தாமும் பயன்படுத்திக்கொண்டு, அடுத்தவர்களுக்கும் வழங்கும் முறையே செல்வம் ஆகும்.
செல்வம் Sentence in Tamil:
என்னிடம் போதுமான செல்வம் நிறைந்து இருக்கிறது என்று என் பக்கத்து வீட்டுக்காரர் தினமும் சொல்லிக்கொண்டே இருப்பார்.
16 செல்வங்கள் யாவை:
செல்வம் என்பது மேலே சொல்லப்பட்டுள்ள முறையினை குறித்தாலும் கூட புதிதாக திருமண மணமக்களை வயதில் மூத்தவர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று கூறுவார்கள். அப்படி பார்த்தால் இந்த 16 என்பது செல்வதை குறிப்பிடாமல் 16 வகையான வளங்களை பெற்று வாழுமாறு குறிக்கிறது.
- அறிவு
- ஆற்றல்
- கல்வி
- புகழ்
- பெருமை
- பொன்
- நம்பிக்கை
- ஆயுள்
- நோயில்லா வாழ்வு
- முயற்சி
- துணிவு
- இளமை
- நிலம்
- நன்மக்கள்
- பொருள்
- வெற்றி
செல்வம் எதிர்ச்சொல்:
செல்வம் என்பதின் எதிர்சொல் வறுமை ஆகும்.
செல்வம் Meaning in English:
- Wealth
- Riches
- Property
- Opulance
செல்வம் என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கில வார்த்தை மேலே சொல்லப்பட்டுள்ள இவை அனைத்தும் ஆகும்.
சிம்மாசனம் வேறு சொல் என்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |