சேதம் வேறு சொல்
நாம் தமிழ் மொழியில் பேசுகின்றோம், எழுதுகின்றோம் ஆனால் இதில் உள்ள பல வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வதில்லை. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளது. நம் முன்னோர்களின் காலத்தில் ஏதவாது ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் புத்தகத்தை புரட்டினார்கள்.
ஆனால் இப்போது கையில் உலகம் என்றாகிவிட்டது. எந்த வார்த்தை அல்லது ஒரு இடத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் மொபைலிலே போட்டு தெரிந்து கொள்கிறார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் சேதம் என்ற என்ற சொல்லிற்கு உள்ள பல சொற்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சேதம் என்றால் என்ன.?
சேதம் என்பது ஒரு பொருள் வீணாகுவதை குறிக்கிறது. இந்த சேதம் என்பதை இயற்கையாகவோ, செயற்கையாகவோ நடக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. வீட்டில் அம்மா ஒரு பொருளை எடுக்க சொல்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அந்த பொருளை நீங்கள் கீழே போட்டு உடைத்து விடுகிறீர்கள் என்றால் அந்த பொருளானது சேதமாகிவிட்டது.
சேதம் என்பது பல வகையில் ஏற்படும், புயல், மழை, வெள்ளம், சுனாமி போன்றவற்றாலும் சேதம் ஏற்படலாம்.
எடுத்துக்காட்டு:
அம்மா எடுத்து வர சொன்ன பாட்டிலை கீழே போட்டு உடைத்து விட்டேன், இதனால் அம்மா ஏன் பாட்டிலை சேதப்படுத்தினாய் என்று கேட்டார்கள்.
கனமழையால் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் சேதமடைந்தது.
கனமழையால் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் பழுதடைந்தது.
புயலால் தென்னை மரம் மற்றும் வாழை மரம் சேதமடைந்தது.
சேதம் என்பதற்கு வேறு சொல்:
- கேடு
- சிதைவு
- சீர்குலைவு
- நசிவு
- நாசம்
- பழுது
- பாழ்
- பிரளயம்
- பேரழிவு
- வீழ்ச்சி
- சரிவு
போன்ற சொற்களால் சேதத்தை அழைக்கலாம்.
சேதம் in English:
சேதம் என்பதை ஆங்கிலத்தில் Damage, disadvantage, wreck, wrekage போன்ற சொற்களால் அழைக்கலாம்.
கடவுளை வேறு எப்படி எல்லாம் அழைக்கலாம்..?
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |