சேவை வேறு சொல் | Sevai Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சேவை என்ற சொல்லிற்கான வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, தமிழ் மொழியிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேறு சொல் என்பது இருக்கும். வேறு சொல் என்பது, ஒரே அர்த்தத்தை குறிக்கும் பல சொற்கள் ஆகும். அப்படி ஒரு அர்த்தத்தை குறைக்கக்கூடிய பல சொற்கள் அதிகம் உள்ளது. இதனை தான் வேறு சொல் என்று கூறுவார்கள். நாம் ஒவ்வொரு சொல்லுக்குமான வேறு சொல் பற்றி தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
ஏனென்றால், வேறு சொல் அடங்கிய பல கேள்விகள் தேர்வுகளில் கேட்கப்படும். எனவே, இதனை நாம் தெரிந்து வைத்துகொல்வதன் மூலம் தேர்வில் கேட்கப்படும் வேறு சொல் கேள்விகளுக்கு தெளிவாக பதில் அளிக்க முடியும். உங்களுக்கு பயனுள்ள வகையில், நம் பொதுநலம் பதிவில் பல்வேறு சொற்களுக்கான வேறு சொல் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சேவை என்பதன் வேறு சொல் பற்றி கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
சேவை என்றால் என்ன.?
சேவை என்பது தமிழில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான சொல் ஆகும். சேவை என்ற சொல்ல ஆனது செய்வி என்ற சொல்லிலிருந்து வந்தது. சேவை என்றால் தொண்டு செய்தல் என்று அர்த்தம் ஆகும். அதாவது சேவை என்பது, ஒரு நபருக்கோ அல்லது அல்லது ஒரு நிறுவனம், கோவில் போன்றவற்றிற்கு அன்பால் பக்தியால் அடிபடிந்து அவற்றிற்கு தேவையானவற்றை மனதார செய்வது ஆகும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் சேவை என்றால் தொண்டு, பணிவிடை, ஊழியம் மற்றும் சேவகம் செய்தல் ஆகும்.
சே – என்றால் செய் என்று பொருள்படும். அதுவே, சேவை என்றால் செய்யப்பெறுவது ஆகும்.
சேவை – ஏவல் வினையான ‘சே’ என்ற ஒற்றெழுத்துச் சொல்லால் அமையப் பெற்றது ஆகும்.
சேவை வேறு சொல்:
- தொண்டு
- பணிவிடை
- ஊழியம்
- சேவகம்
- வழிபடுதல்
- உதவி
மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் சேவை என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் ஆகும். மேலும், சேவை என்பதை இடியப்பம் என்றும் கூறுவார்கள். பெரும்பாலும் பிராமணர்கள் இடியாப்பத்தை சேவை என்று கூறுவார்கள்.
திட்டு என்பதன் வேறு சொல் என்ன.?
சேவை in English:
சேவை என்பதை ஆங்கிலத்தில் Service என்று கூறுவார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.