தராசு வேறு சொல்

Advertisement

தராசு வேறு சொல்

நம்முடைய தமிழ் வார்த்தைகளில் நிறைய வார்த்தைகள் இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு அர்த்தம் உடையதாக இருக்கிறது. இந்த அர்த்தமானது நாம் பயன்படும் இடத்திற்கு தகுந்தது போல மாறுபடும். அதனால் நாம் வார்த்தைக்கான அர்த்தங்களை தெரிந்து கொள்வது அவசியமானது. அதுமட்டுமில்லாமல் அரசு பொது தேர்வுகளில் தமிழிருந்து தான் அதிகமான கேள்விகள் இடம் பெறுகிறது. அதனால் அரசு தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்தி கொள்கிறவர்கள் இந்த மாதிரியான ஒரு சொல் தரும் பல சொற்களை தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய பதிவில் நிறைய வகையான சொற்களுக்கு அர்த்தம் மற்றும் வேறு சொற்களை பதிவிட்டு வருகிறோம். இந்த பதிவில் தராசு என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

தராசு என்றால் என்ன.?

தராசு” என்பது ஒரு பொருளின் எடையை அளவிடப் பயன்படும் கருவியாகும். பொதுவாக இது இரண்டு பாத்திரங்கள் கொண்ட சமநிலைக் கருவியாக இருக்கும். அதாவது கடைகளில் உள்ள பொருட்களை அளவின் கணிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை ரேஷன் கடை, காய்கறி கடை, பழக்கடை, இரும்பு கடை இன்னும் பல இடங்களில் இவை காணப்படுகிறது.

பொருட்களின் எடையை காண்பதற்கும் இது உதவியாக இருக்கிறது. காலபோக்கில் இந்த தராசு ஆனது இல்லாமல் போகிவிட்டது. அதற்கு பதிலாக மெஷின் வந்துவிட்டது. தராசு என்பது நம்முடைய கைகளால் பிடித்து கொண்டுப ஒரு பக்கம் கல் மற்றொரு பக்கம் பொருள் வைக்க வேண்டும். இதனை வைத்து தான் பொருளை வியாபாரம் செய்தார்கள். ஆனால் இப்போது கடைகளில் தராசு இல்லாமல் மெஷின் வடிவத்தில் தான் இருக்கிறது.

நம்முடைய ஊரில் வந்து வியாபாரம் செய்கிறவர்கள் கூட ஒருவர் அல்லது இருவரிடம் மட்டும் தான் இந்த தராசை பார்க்கப்முடிகிறது.

எடுத்துக்காட்டு:

  • தராசை ஒழுங்காக பிடியுங்கள் ஒரு பக்கமாக எடை செய்கிறது.
  • தராசில் சரியாக அளந்து போடுங்க.

வித்தியாசம் வேறு சொல்..!

தராசு வேறு பெயர்கள்:

தராசு வேறு சொல்

தராசு என்பதை பாலால் வார்த்தைகளால் அழைக்கலாம். அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

  • எடைக்கூறு
  • சமதூக்கம் கருவி
  • துலாக்கோல்
  • நிறைகோல்
  • தூக்குக்கோல்

தராசு வகைகள் பெயர்கள்

தராசில் பல வகைகள் உள்ளது.

தட்டுத் தராசு, விற்றராசு, இரசாயனத் தராசு, மும்மைக் கோல் தராசு, எலக்ட்ரானிக் தராசு எனப் பல வகைகளாக உள்ளன.

தட்டுத் தராசு: இது இரு தட்டுகளைக் கொண்ட தராசு. ஒரு தட்டில் பொருளை வைத்து, மறு தட்டில் அளவை வைத்து எடையைக் கணக்கிடுவர்.

விற்றராசு: இது ஸ்பிரிங் மூலம் எடையைக் கணக்கிடும் தராசு. இதில் அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும்.

இரசாயனத் தராசு : இது ஆய்வகங்களில் துல்லியமான அளவீடுகளுக்குப் பயன்படும் ஒரு வகை தராசு.

மும்மைக் கோல் தராசு: இதில் மூன்று கோல்கள் உள்ளன. இதுவும் துல்லியமான அளவீடுகளுக்குப் பயன்படுகிறது.

எலக்ட்ரானிக் தராசு: இது மின்னணு முறையில் எடையைக் கணக்கிடும் தராசு

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement