தர்மம் வேறு சொல் | Dharmam Veru Sol in Tamil

Advertisement

தர்மம் வேறு சொல்

நாம் பேசும் தமிழ் மொழியில் பல வார்த்தைகள் இருக்கிறது. அதற்கான அர்த்தங்கள் கேட்டால் நமக்கு தெரியாது. ஏனென்றால் ஒரு வார்த்தையில் பல அர்த்தங்கள் இருக்கிறது. எல்லா அர்த்தங்களும் நமக்கு தெரிந்திருக்காது. அது போல தமிழ் வார்த்தைகளில் ஒரு வார்த்தையை பல சொற்களால் கூறலாம், அவற்றிற்கு ஒரே அர்த்தங்களாக தான் இருக்கும். எடுத்துக்காட்டிற்கு மகிழ்ச்சி என்றால் சந்தோசம், ஆனந்தம் என்று பல சொற்களால் கூறலாம். இவை அனைத்திற்க்கும் ஒரே அர்த்தங்கள் தான் இருக்கும். இது போல ஒரு சொல்லிற்கான பல சொற்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தர்மம் என்பதற்கான வேறு சொற்களை தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தர்மம் என்றால் என்ன.?

தர்மம் என்பது மற்றவர்களுக்கு உதவுவதை கூறுகிறோம். அதாவது உதவி என்று ஒருவர் கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லமால் உதவி செய்வது. தர்மம் தலைகாக்கும் என்ற மொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மொழிக்கான அர்த்தம் என்னவென்றால் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்தால் அந்த தர்மம் உன்னை காக்கும் என்பதே இதன் அர்த்தமாக இருக்கிறது.

இன்னொரு முறையில் தர்மம் என்பதை நீதி என்று கூறலாம். வீட்டில் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தவறு செய்திருக்கிறார், இன்னொருவர் தவறு செய்யவில்லை. இந்த சண்டையில் வெல்வது நீதி ஆக தான் இருக்கும். இதனை தான் தர்மம் என்று கூறுகிறோம்.

தர்மம் வேறு சொல்:

  1. அறம்
  2. ஈகை
  3. கொடை
  4. புண்ணியம்
  5. தானம்
  6. நீதி
  7. தருமம்
  8. நற்செயல்
  9. ஒழுக்கம்

தர்மம் எதிர்சொல்:

தர்மத்திற்கான எதிர்சொல் அதர்மம்.

கம்ப்யூட்டர் தமிழ் சொல்

ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement