திறமை வேறு சொல்
வணக்கம் வாசகர்களே! இன்றைய பதிவில் திறமை வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம். நமக்குள் இருக்கும் திறமை நம்மை அறியாமலேயே நாம் செய்யும் செயல்களில் வெளிப்படும். உலகத்தில் இருக்கும் அனைவரும் திறமைசாலிகள் தான். ஒவ்வொருவருக்கும் தனித்துவமான திறமை இருக்கும். ஒரு சிலர் அவர்கள் திறமையினால் வெற்றி அடைவார்கள். ஒரு சிலர் அவர்கள் திறமை என்ன என்றே தெரியாமல் இருப்பார்கள்.
திறமை என்னும் சொல்லை நம் அனைவரும் பயன்படுத்தி வரும் சொல் தான். ஆனால் திறமைக்கு வேறு சொற்கள் என்ன என்பதை நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா? திறமை சொல்லுக்கான வேறு சொல் உங்களுக்கு தெரியவில்லை என்றால் இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
திறமை என்றால் என்ன?
திறமை என்றால் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யும் ஆற்றல் என்று பொருள். குறிப்பிட்ட செயலைச் செய்வதற்கு நமக்கு உதவியாக இருக்கும் இயற்கையான திறன் என்றும் பொருள்படும். மேலும், இன்றைய காலகட்டத்தில் வேலை தேடும் இளைஞர்கள் தங்கள் தனித்திறமையை மேம்படுத்திக் கொண்டால் தான் வேலை கிடைக்கும் என்ற நிலைமை வந்துவிட்டது. நேர்காணலில் உங்களுடைய கல்வி தகுதியை விட உங்களுடைய தனித்திறமையை தான் முதலில் மதிப்பிடுகிறார்கள். எனவே திறமை என்பது இளைஞர்கள் வாழ்வில் முக்கிய பங்காக இருக்கிறது.
திறமை வேறு சொல்:
- திறமை
- திறன்
- இயல்திறன்
- புலமை
திறமை In English:
- Talent
- Ability
- Capability
- Skill
எடுத்துக்காட்டு:
- அவள் தன் திறமைக்கு ஏற்றவாறு பணியைச் செய்தாள்.
- அவர் பேசும் திறனை இழந்துவிட்டார்.
- உங்கள் வலுவான கற்பனையை விருப்பத்துடனும் செயலுடனும் ஆதரிக்கும் திறன் உங்களிடம் உள்ளது.
- அவன் திறமைக்கான பரிசு அவனுக்கு கிடைத்தது.
- அவன் செய்த செயலில் அவளுடைய திறமை வெளிப்பட்டது.
- என் திறமையினால் என்னால் இந்த வேலையை முடிக்க முடியும்.
அரசர்களுக்கு வீசப்படும் விசிறி என்றால் என்ன
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |