தீங்கு வேறு சொல் | Theengu Veru Sol in Tamil
வாசகர்கள் அணைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தீங்கு என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் பற்றி கொடுத்துள்ளோம். ஒவ்வொரு மனிதருக்கும் கல்வி அறிவு என்பது எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். அதிலும், தமிழ் மொழியில் உள்ள அனைத்தையும் நாம் அறிந்துகொள்வது அவசியம். தமிழ் மொழியிலே நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பல உள்ளது. அவற்றில் ஒன்று தான் வேறு சொல்.
வேறு சொல் என்பது ஒரு சொல்லின் அர்த்தத்தை குறிக்கும் சொற்கள் ஆகும். இதுபோன்ற வேறு சொற்கள் தமிழ் மொழியில் அதிகம் உள்ளது. ஆனால், அவை அனைத்தையும் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருங்க வாய்ப்பில்லை. இதுபோன்ற வேறு சொல் அடங்கிய கேள்விகள் போட்டி தேர்வுகளில் அதிகம் கேட்கப்படும். ஆகையால், அதனை தெரிந்துகொள்ளுவது மிகவும் அவசியம். எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில், பல்வேறு தமிழில் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி நம் பொதுநலம் பதிவில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில், தீங்கு என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தீங்கு என்பதன் வேறு சொல்:
- தீவினை
- தீமை
- குற்றம்
- துன்பம்
- கேடு
மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் தீங்கு என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் ஆகும்.
தீங்கு என்றால் என்ன.?
தீங்கு என்பது பொருள்களையோ சூழலையோ அல்லது மனிதர்களையோ பாதிக்கிற நிலை ஆகும். ஒருவர் மற்றவர்க்கு செய்யும் கேடு அல்லது பாதிப்பு தீங்கு ஆகும். நன்மைக்கு எதிராக நடக்கூடிய அனைத்தும் தீங்கு ஆகும்.
தீங்கு எடுத்துக்காட்டு வாக்கியம்:
- உடலுக்கு புகைபிடிப்பது தீங்கு விளைவிக்கும்.
- பொய்யான தகவல்கள் பகிர்வது சமூகத்தில் தீங்கு விளைவிக்கும்.
- புயல் குடியிருப்புகளை சேதப்படுத்தியது.
- மரத்தை வெட்டுவது சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகும்.
- பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் நல்ல முறையில் நடந்து கொள்.
தீங்கு திருக்குறள்:
1. தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
பொருள் – தீய செயல்களால் எப்போதும் கெடுதல்தான் ஏற்படும். அதனால், நெருப்பைவிட தீய செயல்கள் தீங்கானது.
2.அறிவினுள் எல்லாந் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
பொருள் – தனக்குத் தீமை செய்தவர்க்குக்கூட தீமை செய்யாமல் இருப்பதுதான் அறிவினுள் சிறந்த அறிவு.
முறத்தின் வேறு சொல் என்ன தெரியுமா.?
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |