தொண்டு என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

தொண்டு வேறு சொல் | Thondu Veru Sol

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தொண்டு என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தமும், அந்த அர்த்தத்தை குறிக்கும் வேறு சொற்களும் இருக்கும். ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற வேறு சொற்கள் அடங்கிய கேள்விகள் தேர்வுகளில் கேட்கப்படும்.

அதுமட்டுமில்லாமல், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற கேள்விகள் அதிகம் வரும். ஆகையால், நாம் அனைவருமே வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். எனவே, நீங்கள் வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். படித்து பயனடையுங்கள். இன்றைய பதிவில் தொண்டு என்ற சொல்லிற்கு என்ன வேறு சொற்கள் (Thondu Veru Sol) இருக்கிறது என்பதை கொடுத்துள்ளோம்.

சிரம் வேறு சொல்

தொண்டு என்றால் என்ன.?

தொண்டு என்பது, பிறருக்கு அல்லது ஏதோவொரு விசயத்திற்கு உதவி தேவைப்படும் சமயத்தில் “பிறருக்காகவோ அல்லது இறைவனுக்காகவோ” தானாக முன்வந்து எதனையும் எதிர்பாராமல் அவர்களுக்கு தேவையானவற்றை செய்வது ஆகும்.

தொண்டில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும்/இடத்திற்கும் ஏற்றவாறு தொண்டு செய்யும் விதம் மாறுபடும். இவற்றில் பணம், பொருட்கள், சேவைகள் ஆகியவை அடங்கும்.

தொண்டு என்பதன் வேறு சொல்:

  • சேவை
  • உதவுதல்
  • சேவகம்
  • தானம்
  • பணிவிடை
  • ஊழியம்
  • அர்ப்பணிப்பு
  • தியாகம்
  • தியாகம்

மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் தொண்டு என்பதை குறிப்பிடும் வேறு சொற்கள் ஆகும். பெரும்பாலும்தொண்டு என்பதை சேவை, உதவுதல், சேவகம், தானம் என்று கூறுவார்கள்.

தொண்டு வேறு சொல்

கோவிலுக்கு செய்யும் தொண்டு வேறு சொல்:

கோவிலுக்கு செய்யும் தொண்டினை பெரும்பாலும் ‘பணிவிடை’  என்று கூறுவார்கள்.

தொண்டு in English Words:

தொண்டு வேறு சொல்

தொண்டு என்பதை ஆங்கிலத்தில் Charitable, Charity என்று கூறுவார்கள்.

தொண்டு பற்றி திருக்குறள்:

குறள்:

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

பொருள்:

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

குறள்:

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.

பொருள்:

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

தொண்டு பழமொழி:

உனக்கு பொறுமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானாலும் பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்.

தியாகம் வேறு சொல்

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement