நஞ்சு வேறு சொல் | Nanju Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலக தினமும் பல வேறு சொல் பதிவுகளை அறிந்து வருகிறோம். தமிழ் மொழியில், உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பல வேறு பெயர்களும் அல்லது வேறு சொல்லும் உள்ளது. அந்த வகையில், இப்பதிவில் நஞ்சு என்பதற்காக வேறு பெயர்களை தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம்.
நஞ்சு என்ற வார்த்தையை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு நஞ்சு என்பதற்கான அர்த்தம் என்ன என்பது தெரியாமல், நஞ்சு என்பதற்கு வேறு சொல் ஏதேனும் இருக்கிறதா.? என்று கேட்பார்கள். எனவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில், இப்பதிவில் நஞ்சு என்றால் என்ன.? நஞ்சு வேறு சொல் தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
நஞ்சு என்றால் என்ன.?
நஞ்சு என்பது தீங்குவிளைவிக்கக்கூடிய பொருள் ஒன்று ஆகும். அதாவது, உயிருள்ள அனைத்திற்கும் கெடுதியை அல்லது நலக்குறைவை அல்லது சில நேரங்களில் இறப்பைக்கூட ஏற்படுத்தக்கூடிய பொருட்களாகும். அதாவது , உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்லப்போனால், நஞ்சு என்றால் விஷம் என்பது அர்த்தம் ஆகும். நஞ்சு என்பதை உணர்த்தி ஒரு பழமொழியும் உள்ளது.
“அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு”
பொருள்:
எந்த ஒரு உணவு பொருட்களையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது, அது நம் உடலில் நஞ்சாக மாறுகிறது, என்பதே இதன் பொருளாகும். உணவு மட்டுமின்றி எல்லா விஷயங்களுக்கும் “அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு” என்பது பொருந்தும்.
மருத்துவத் துறையிலும், விலங்கியலிலும், உயிரியற் செயற்பாடுகளினால் உருவாகும் நச்சுப்பொருள், பாம்புக்கடி போன்ற கடிகளினால் உடலுக்குள் செலுத்தப்படும் நஞ்சு என்பவை பொதுவான நஞ்சு என்பதிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன.
நஞ்சு வேறு பெயர்கள்:
- விஷம்
- பாசானம்
- விடம்
- விசம்
- நச்சுப் பொருள்
Nanju in English Meaning:
நஞ்சு என்பதை ஆங்கிலத்தில் Toxin அல்லது Poison என்று கூறுவார்கள்.
நஞ்சு பயன்கள்:
பூச்சிக்கொல்லிகள் ஆகவும், களைக்கொல்லிகள் போன்ற பொருட்களில் நச்சு பொருட்கள் உள்ளது. இதுமட்டுமின்றி, இக்காலத்தில் பல பொருட்களில் நச்சு பொருட்கள் சேர்க்கப்பட்டு வருகிறது.
தொடர்புடைய பதிவுகள் 👇 |
விகடகவி வேறு சொல் |
சாம்பல் வேறு சொல் |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |