நட்பு வேறு சொல் | நண்பன் வேறு பெயர்கள்
பல மொழிகள் இருந்தாலும் நாம் பேசுவது தமிழ் மொழி தான். இந்த மொழியை நாம் சரளமாக பேசுகின்றோம், எழுதுகின்றோம். ஆனால் இதில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தம் மற்றும் வேறு சொற்களை அறிந்திருப்பதில்லை. பள்ளியில் படிக்கும் போது ஒரு சொல் தரும் பல சொற்களை படித்திருப்போம். இப்போது நம்முடைய குழந்தைகளுக்கும் ஒரு சொல் தரும் பல சொற்களை வீட்டு பாடமாக கொடுத்திருப்பார்கள். நாம் உடனே Google-லில் சர்ச் செய்து தான் அதற்கான விடைகளை கூறுவோம்.
நட்பு என்றால் என்ன.?
வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தல் , விட்டு கொடுத்தால் அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்களுடன் இருக்கும் போது கவலையை மறந்து சந்தோஷமாக இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய கவலையை அவர்களின் கவலையாக ஏற்று கொள்வதற்கு நண்பர்களால் மட்டும் முடியும்.
ஒரு குழந்தை பிறந்தது முதல் அவர்களுடைய உறவுகள் அனைவரையும் வீட்டில் உள்ளவர்கள் சொல்லி தான் தெரியும். அதாவது இவர் தான் அப்பா, தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா போன்ற உறவுகளை கூறுவார்கள். ஆனால் இந்த உறவுகள் மற்றவர்கள் கூறி தெரிகின்றது. நாமாக அறிமுகமாகும் அல்லது பழகுபவர்கள் என்றால் நட்பு தான்.
இந்த நட்பு என்பது பள்ளி பருவம், கல்லூரி பருவம், வேலை பார்க்கும் இடம் போன்ற இடங்களில் நட்பு கிடைக்கும். மேலும் நாம் பேருந்தில் செல்லும் போது நட்பு கிடைக்கும். யாரு என்றே தெரியாது, ஆனால் அவர்களுடன் ஒரு இணைபிரியா ஒரு உறவு கிடைக்கும்.
நண்பர் என்பது உங்களுடன் நேரத்தை செலவிடும் நபர். நீங்கள் கஷ்டத்தில் இருக்கும் போது உதவ கூடியவர். உங்களுடைய சந்தோசம், துக்கத்தில் பங்கு கொள்பவராக இருப்பார்கள். அம்மா, அப்பாவிடம் சொல்ல முடியாத விஷயத்தை கூட நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள்.
நீங்கள் உங்களுடைய நண்பரை மற்றவரிடம் விட்டு கொடுக்க மாட்டீர்கள். அதே போல அவர்களும் உங்களை விட்டு கொடுக்க மாட்டார்கள். நீங்கள் கஷ்ட நிலையில் இருந்தால் உங்களை சிரிக்க வைத்து விடுவார்கள்.
நட்பு வேறு பெயர்கள்:
- கூட்டாளி
- சினேகம்
- நண்பர்கள்
- தோழர்கள்
- தோழமை
போன்ற பெயர்களால் நட்பு என்பதை அழைக்கலாம்.
நட்பு வகைகள்:
இந்த நட்புகளானது யாருடன் வேண்டுமானாலும் ஏற்படலாம், அது போல இதில் வகைகளும் இருக்கிறது.
ஆண்-ஆண் நட்பு
பெண்-பெண் நட்பு
ஆண்-பெண் நட்பு
மலையாள வார்த்தைகளும் அதற்கான தமிழ் அர்த்தங்களும்
| இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |














