நலம் என்பதற்கான வேறு சொல் என்ன.?

Advertisement

நலம் வேறு சொல்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நலம் என்பதற்கான வேறு சொல் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேறு சொல் என்பது இருக்கும். ஆனால், நமக்கு எல்லா சொல்லுக்குமான வேறு சொல் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாம் ஏதேனும், தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருந்தால் இதுபோன்ற வேறு சொல் கேள்விகள் அதிகமாக கேட்கப்படும். ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவில் நலம் என்பதற்கான வேறு சொல்லை பதிவிட்டுள்ளோம்.

நலம் என்ற சொல்லினை நாம் அதிகமாக கேட்டு இருப்போம். நலம் என்றால் நல்லது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், நலம் என்ற சொல்லினை வேறு எப்படியெல்லாம் கூறலாம் என்று தெரியாது. ஓகே வாருங்கள் இப்பதிவின் வாயிலாக நலம் என்பதற்கான வேறு சொல் பற்றி பார்க்கலாம்.

நலம் என்றால் என்ன.?

நல் – அம் = நலம் 

நலம் என்றால் நன்றாக இருக்கும் நிலையை குறிக்கிறது. உங்களை யாரேனும் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால், அவர்ளுக்கு நலமாக இருக்கிறேன் என்று கூறுவீர்கள். இதனை தவிர்த்து நலம் என்பதற்கு பல்வேறு சொற்கள் உள்ளது. மேலும், நலம் என்பது சோபனம் என்ற யோகத்தின் தனித்தமிழ் சொல்.

நலம் என்பதற்கான வேறு சொல்:

  • நன்மை
  • சோபனம்
  • இன்பம்
  • உதவி
  • கண்ணோட்டம்
  • அழகு
  • அன்பு
  • ஆசை
  • குணம்
  • பயன்
  • புகழ்
  • உயர்வு
  • நல்வாழ்வு
  • நிறம்
  • செம்மைநிறம்
  • விருச்சிகராசி
  • எருதின்விதை
  • சுக்கு
  • அறம்
  • நல்ல நிலை

மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் நலம் என்பதற்கான வேறு சொற்கள் ஆகும்.

நலம் ராசி பலன்:

ராசி பலனில் நலம் என்ற சொல் குறிப்பிடப்பட்டிருக்கும். நலம் என்றால் இன்றைய நாள் உங்களுக்கு நல்லதாக இருக்கும் என்று அர்த்தமாகும்.

நலம் meaning in English:

நலம் என்றால் ஆங்கிலத்தில் Good என்று அர்த்தம் ஆகும்.

தொடர்புடைய பதிவுகள் 👇
அலட்சியம் வேறு சொல்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement