நாவல் வேறு சொல்
மொழிகள் பலவண்ணம் இருந்தாலும் நம்முடைய தாய் நாட்டில் தமிழ் மொழி தான் பேசப்படுகிறது. இந்த தமிழ் மொழியில் சரளமாக பேசுகின்றோம், எழுதுகின்றோம். ஆனால் தமிழ் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அது போல பல சொற்களாலும் அழைக்கலாம். இதனை பற்றி எல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அரசு தேர்வுகளுக்கு தயார் ஆகுகிறவர்களுக்கு ஒரு தமிழில் பல கேள்விகள் இடம் பெறும். அதில் ஒன்று தான் ஒரு சொல் தரும் பல்சொற்கள். நம் பதிவில் ஒரு சோ தரும் பல சொற்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாவல் என்பதனை எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
நாவல் என்றால் என்ன.?
நாவல் என்பது மக்களால் விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையின் நிகழ்வுகளை கற்பனையாக உரை வடிவில் வழங்கப்படுகிறது. மனிதர்கள் கதையிலும், வரலாற்றிலும் ஆர்வம் காட்ட கூடியவர்களாக இருப்பார்கள்.
நாவல் என்பது ஒருவரின் வாழ்க்கையை பற்றி கூற கூடியது. வாழ்க்கையின் நிகழ்வுகளை கற்பனையாக உரை வடிவில் வழங்க கூடியதே நாவல்.
நாவல் வேறு சொல்:
நாவல் என்பதனை புதினம் என்ற சொல்லால் அழைக்கின்றார்கள்.
நாவல் பெயர் விளக்கம்:
மேல் நாட்டவர் மூலம் தமிழிற்கு கிடைத்த இலக்கியமே நாவல் ஆகும், இச்சொல் ஆனது Novela என்னும் இத்தாலிய சொல்லில் இருந்து உருவெடுத்தது. தமிழரும் நாவல் என்றே இவ்விலக்கியத்தை அழைக்கத் தொடங்கி பின் நவீனம் எனப் பெயரிட்டழைத்து இன்று புதினம் என்று அழைக்கின்றனர்.
முதல் நாவல்:
நாவலை சோதனை செய்வதற்காக முதல் நாவலை எழுதினார்கள். இதனை இத்தாலிய நாட்டை சேர்ந்த பொக்காசியோ என்ற எழுத்தாளர் தன்னுடைய வாழ்க்கையை கதையாக எழுதினார்கள். இதற்கு பெயராக தெகாமரன் என்று சூட்டப்பட்டது. அதன் பிறகு சாமவேல் ரிச்சட்சன் என்பவர் 1741 ஆம் ஆண்டில் பமிலா என்ற நாவலை எழுதினார்,இது முதல் நாவல் ஆகும்.
புதினம் நாவல் வேறுபாடு:
நாவல் வாழ்வின் ஒரு துளியை, ஒரு புள்ளியை , ஒரு தரப்பை மட்டும் சொல்லவந்த வடிவம் அல்ல. அதற்கு கவிதை, சிறுகதை, குறுநாவல் ,நாடகம் என பல கலைவடிவங்கள் உள்ளன. நாவல் இந்த அடிப்படையில் பிற இலக்கிய வடிவங்கள் அனைத்தில் இருந்தும் மாறுபட்டது. நாவல் அதன் கருவைச் சார்ந்த அனைத்தையும் வாசகன் முன் தொகுத்து முன்வைக்க முனைகிறது.
புதினம் என்பது “மனித உயர்வுகள், எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றை விளக்கிக் காட்டும் உரைநடையில் அமைந்த நீண்ட கதை என்றே ” அகராதி விளக்கம் தருகின்றது.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |