நினைவு என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

நினைவு வேறு சொல் | Ninaivu Veru Sol in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நினைவு என்பதனை குறிக்கும் வேறு சொற்கள் என்ன என்பதை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஒருவருடைய அறிவை மேலும் மேலும் வளர்க்க வேண்டுமானால், கல்வியை மட்டும் மட்டுமே ஒருபோதும் நிறுத்த கூடாது. வேளைக்கு சென்றால் கூட தந்து அறிவினை மென்மேலும் அதிகரித்துக்கொண்டே போக வேண்டும். கற்க கற்க தான் அறிவு பெருகும் என்று வள்ளுவர் குறளில் கூறியுள்ளார். “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” என்ற குறளுக்கு ஏற்ப படிக்க படிக்க தான் அறிவு பெருகும்.

அதிலும் குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் நபர்கள் என்றும் படிப்பதை நிறுத்தவே கூடாது. போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளில் வேறு சொற்களும் ஒன்று. ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான தமிழ் சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நினைவு என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் பற்றி கொடுத்துள்ளோம். எனவே, நீங்கள் நினைவு என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நினைவு என்றால் என்ன.? 

நினைவு என்பது என்றும் மறைவால் மனதில் தோன்றும் எண்ணங்கள் ஆகும். நம் அனைவருக்குமே ஒரு சில விஷயங்கள் மனதில் நினைவிற்கு வந்து கொண்டே இருக்கும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், நம் மனதில் ஆழ்ந்து இருக்கும் நிகழ்வுகள், விஷயங்கள் அடிக்கடி நம் நினைவிற்கு வந்துகொண்டே இருக்கும். அதனை தான் நினைவு என்கிறார்கள்.

பரிவு என்பதற்கான அர்த்தம் மற்றும் வேறு சொல்

நினைவு என்பதன் வேறு சொல்:

  • எண்ணம்
  • ஞாபகம் 
  • கருத்து
  • சிந்தனை
  • நினைப்பு
  • நெனப்பு
  • நெனவு
  • ஓர்மை
  • ஞாபகம்
  • பிரஞ்ஞை
  • செய்தி
  • மனநிலை 
  • நோக்கம் 

மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் நினைவு என்பதற்கான வேறு சொற்கள் ஆகும்.

நினைவு என்பதன் எதிர்சொல்:

  • மறப்பு
  • மறவுதல்
  • மறக்கை

நினைவு in English:

நினைவு என்பதை ஆங்கிலத்தில் Thought, Remember, Memory என்றெல்லாம் கூறுவார்கள்.

நினைவு எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

  • நாளைக்கு நீங்கள் உங்கள் வேலையை முடித்துவிட்டே வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
  • எப்போதும் அவன்/அவள் நினைவுகள் தான் என் மனதில்.
  • ஒவொருவரிடைய வாழ்விலும் மறக்க முடியாத தருணங்கள் எப்போதும் நினைவில் இருக்கும்.
  • படித்ததை நினைவு கூறுங்கள் என்று ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்.

இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் நினைவுச்சின்னம் பற்றி தெரியுமா.?

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement