Padai Veru Sol in Tamil
பொதுநலம் நண்பர்களுக்கு வணக்கம்..! நம்மில் பலருக்கும் தினம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோல தான் நீங்களும் நினைக்கிறீர்களா.? அப்போ உங்களுக்கு எங்கள் பொதுநலம் பதிவு பயனுள்ளதாக இருக்கும். எங்கள் பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும்.
சரி இவ்வுலகில் பிறந்த உயிர்களாக இருக்கட்டும் அல்லது பொருளாக இருக்கட்டும், அனைத்திற்குமே ஒன்றுக்கு இரண்டு பெயர்கள் கூட இருக்கும். அவ்வளவு ஏன் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு கூட வெவ்வேறு பெயர்கள் நிறைய இருக்கின்றன. அப்படி இருக்கும் பெயர்களை நாம் நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் படை என்ற சொல்லுக்கான வேறு பெயர்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
படை என்பதன் வேறு சொல் என்ன..?
படை என்றால் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். பலரும் ஓன்று சேர்ந்து சண்டைக்கு செல்வதை தான் படை என்று சொல்கிறோம்.
அந்த காலத்தில் தான் இந்த வார்த்தை அதிகமாக பேசப்பட்டது. அந்த காலத்தில் போருக்கு செல்பவர்களை பார்த்து, இதோ படையெடுத்து கிளம்பி விட்டார்கள் என்று சொல்வார்கள். இந்த படையெடுத்து என்ற வார்த்தையை நம் தாத்தா பாட்டி சொல்லியும் கேள்விப்பட்டிருப்போம்.
அதுபோல பண்டைய காலத்தில் பல படைகள் ஒன்றினைந்த சேனையாக இருந்தது. அக்கால தமிழர்கள் பலவகை போர்ப்படைகளைக் கொண்டிருந்தனர். அவற்றுள் நான்கு வகைகள் முக்கியமானவையாக உள்ளன. அவை, காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என்பதாகும்.
தேர்ப்படை என்பது தேர்களின் மீது அமர்ந்து போரிடும் மனிதர்களை கொண்ட ஒரு படைப் பிரிவாகும். அதுபோல ஒரு படை மட்டும் நேரடியாக போரில் பங்கு கொள்ளாமல் இருக்கும். அதை ஒற்றர் படை என்று சொல்வார்கள்.
அதுபோல படைகளை அதன் ஆயுதத்தை பொறுத்து 4 வகைகளாக பிரிக்கலாம். அவை,
- விற்படை
- வேற்படை
- மற்படை
- வாட்படை
படை வேறு சொல்:
- சேனை
- திரள்
- சுற்றம்
- தானை
தொடர்புடைய பதிவுகள் 👇 |
செய்யுள் என்பதை வேறு எப்படி சொல்லலாம் தெரியுமா..? |
சக்கரம் என்பதை வேறு எப்படிஎல்லாம் சொல்லலாம்..? |
நஞ்சு என்பதற்காக வேறு பெயர்கள்..! |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |