பண்டகசாலை வேறு சொல் | Pandagasalai Veru Sol
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பண்டகசாலை என்பதற்கான வேறு சொற்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். பண்டகசாலை என்ற வார்த்தையினை நாம் அனைவருமே அதிக இடங்களில் கேட்டு இருப்போம். ஆனால், நம்மில் பலருக்கும் பண்டகசாலை என்றால் என்ன என்பதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை பண்டகசாலை என்றால் என்ன என்பதையும், அதற்கு ஏதேனும் வேறு பெயர்கள் இருக்கிறதா என்பதையும் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவோம்.
எனவே, அப்படி நீங்கள் பண்டகசாலை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க, இப்பதிவில் பண்டகசாலை என்றால் என்ன அர்த்தம் என்பதையும், அதனுடைய வேறு சொற்களை தொகுத்தும் பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
Pandagasalai Meaning in Tamil:
பண்டகசாலை என்பது, மிகுதியானத் தகவல்களைச் சேமிக்கும் இடம், பொருட்களை வைக்கும் இடம்,அணிகலன் முதலியன வைக்கும் இடம் மற்றும் தானியங்களைச் சேமிக்கும் இடம் என்றும் பொருள்படும். அதாவது அதிகமான தகவல்களை அல்லது பொருட்களை சேமித்து வைக்கும் இடம் பண்டகசாலை ஆகும். சேமித்து வைக்கும் பொருட்களுக்கும் இடத்திற்கும், சூழலுக்கு ஏற்ப பண்டகசாலை வேறுபடும். நம் நாட்டில் பல்வேறு வகையான பண்டகசாலைகள் உள்ளன.
நினைவு என்பதன் வேறு சொல் என்ன.?
பண்டகசாலை வேறு சொல்:
- கிடங்கு
- களஞ்சியம்
- கருவூலம்
- பண்டக மனை
- பண்டகசாலை,
- பண்டக வீடு
- பொருளறை
- கருவூல அறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் பண்டகசாலை என்பதற்கான வேறு சொற்கள் ஆகும்.
Pandagasalai in English:
பண்டகசாலை என்பதை ஆங்கிலத்தில் Warehouse, Godown, Entrepot மற்றும் Repository என்று கூறுவார்கள்.
பண்டகசாலை எடுத்துக்காட்டு வாக்கியம்:
- பண்டகசாலையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தரமானவை.
- நாங்கள் புதிய பொருட்களை வாங்கிய பிறகு, அவற்றை பண்டகசாலையில் சேமிக்கிறோம்.
- பொருட்களை பண்டகசாலையில் சேமித்து வைப்பது மிகவும் நல்லது.
- பொருட்களை சேமித்து வைக்கும் இடம் பண்டகசாலை ஆகும்.
- பெரிய பெரிய கடைகளில் பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து பண்டகசாலையில் சேமித்து வைப்பார்கள். அதன் பிறகு, தேவையானபோது அதிலிருந்து எடுத்து கொள்வார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |