பம்பரம் ஆங்கில பெயர் என்ன தெரியுமா? | Bambaram in English Word

Bambaram in English Word

பம்பரம் in English

கிராம புறங்களில் பெரும்பாலும் குழந்தை பல விதமான விளையாட்டுகளை விளையாடி மகிழ்வார்கள். அவற்றில் ஒன்று தான் பம்பரம் விளையாட்டு. சிறியவர்கள் இந்த பம்பரம் விடும் விளையாட்டை மிகவும் விரும்பி விளையாடுவார்கள். பம்பரம் விடுவதில் பல விதங்கள் உள்ளதாம். சரி இந்த பதிவில் பம்பரம் ஆங்கில பெயர் என்ன?, பம்பரம் விளையாட்டின் பயன்கள், பம்பரம் விடுவது எப்படி? போன்ற தகவல்களை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.

பம்பரம் ஆங்கில பெயர் – பம்பரம் விளையாட்டு in English – Bambaram in English Word:

பம்பரத்தை ஆங்கில பெயர் Spinning Top (சபின்னிங் டாப்) ஆகும். இவற்றை குழந்தை அதிகம் விரும்பி விளையாடும் ஒரு விளையாட்டு பொருள் ஆகும். இந்த விளையாட்டு பொருளை பயன்படுத்தி பல விதமாக விளையாடலம்.

பம்பரம் ஒரு சமானப்புள்ளியில் நிலைத்து, அதனைச்சுற்றிய அச்சில் சுழலும் ஒரு விளையாட்டுச் சாதனமும், அதனை வைத்து விளையாடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். பம்பரத்தை அதன் தண்டைச் சுற்றி கைவிரல்கள் அல்லது கயிறு அல்லது சாட்டை கொண்டு சுழற்றி விடும்போது வளைவுந்த விசையினால் நிலைத்திருந்து சுழல முடிகிறது.

சுழலும்போது காற்றுமண்டலத்துடன் ஏற்படும் உராய்வினால் இந்த விசையின் தாக்கம் குறையும்போது முதலில் அச்சு திசைமாறி கடைசியாக நிலைதடுமாறி கீழ் விழுந்துவிடும்.

பம்பரம் விடுவது எப்படி?

bambaram

 

பம்பரம் விளையாட பம்பரம், ஒரு மீட்டர் நீளமுள்ள சாட்டை(கயிறு) தேவைப்படும். இவற்றை பயன்படுத்திதான் பம்பரம் விளையாட்டு விளையாடப்படுகிறது. இதனை ஒருவராகவோ அல்லது பலருடன் சேர்ந்தோ விளையாடலாம்.

பம்பரத்தைக் பயன்படுத்தி பல வித விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. முதலில் தரையில் ஒரு வட்டமிட்டுக் கொள்ள வேண்டும், பின்பு 1, 2, 3 சொல்லி எல்லோரும் பம்பரத்தை ஒரே நேரத்தில் சுழற்ற வேண்டும்.

பின்பு கயிறை பயன்படுத்தி பம்பரக்கட்டையை மேல் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்க முடியாதவர்களின் பம்பரங்களை வட்டத்தின் உள்ளே வைக்க வேண்டும்.

வெளியே உள்ளவர்கள் வட்டத்திலிருக்கும் பம்பரத்தை, தங்கள் பம்பரத்தைப் பயன்படுத்தி வெளியே எடுக்க வேண்டும்.

அவ்வாறு பம்பரத்தை வட்டத்தினுள் விடும்போது, பம்பரம் இல்லாதவர் அந்தப் பம்பரத்தை பிடித்துவிட்டால் அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வந்துவிடும்.

சுழற்றுபவரின் பம்பரம் சுழலவில்லை எனில், அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வைக்கப்படும். வட்டத்தில் உள்ள அனைத்துப் பம்பரங்களும் வெளியே வந்து விட்டால் மீண்டும் ஆட்டத்தைத் துவங்க வேண்டும்.

பம்பரம் விளையாட்டின் பயன்கள்:

  • தனித்திறன் வளர்கிறது தன்னம்பிக்கை வளர்கிறது.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>www.Pothunalam.com