பரம்பரை வேறு சொல்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவிலும் நமக்கு நன்கு பழக்கப்பட்ட மற்றும் அதிகமாக பயன்படுத்திய ஒரு சொல்லுக்கான வேறு பெயர்களை பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம். அதாவது பரம்பரை என்ற சொல்லை நாம் கேள்வி பட்டிருப்போம். இத்தகைய சொல் ஆனது ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஏற்ற ஒன்றாக இருக்கிறது. அதாவது குடும்பம் என்பது கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் என இவ்வாறு எல்லாம் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் குடும்பம் என்பது இவ்வாறு மட்டும் இல்லாமல் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்தவர்களையும் குறிக்கிறது. ஆகவே ஒரு குடும்பத்தை பற்றி புகழ்ந்தோ அல்லது இகழ்ந்தோ பேசினாலும் கூட எடுத்துக்காட்டாக பரம்பரையினைரை கூறி தான் சொல்லுவார்கள். ஆகவே இன்று பரம்பரை என்ற சொல்லுக்கான வேறு பெயர்கள் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பரம்பரை வேறு பெயர்கள்:
பரம்பரை என்ற சொல்லுக்கான வேறு பெயர்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது.
- வம்சம்
- குலம்
- தலைமுறை
- சந்ததி
பரம்பரை தமிழ் பொருள்:
பரம்பரை என்பது ஒரு குடும்பத்தை மட்டும் குறிப்பிடுவது அல்ல. அதாவது ஒரு குடும்பத்தில் உள்ள தலை முறையினரை குறிக்கும் முறையாக உள்ளது. எனவே பரம்பரை என்பதன் தமிழ் அர்த்தம் தலைமுறை தலைமுறையாக என்பது ஆகும்.
ஏழு தலைமுறைகள் பெயர்:
தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறை | 1-வது தலைமுறை |
தாய் மற்றும் தந்தை | 2- வது தலைமுறை |
பாட்டன் மற்றும் பாட்டி | 3-வது தலைமுறை |
பூட்டன் மற்றும் பூட்டி | 4-வது தலைமுறை |
ஒட்டன் மற்றும் ஒட்டி | 5-வது தலைமுறை |
சேயோன் மற்றும் சேயோள் | 6-வது தலைமுறை |
பரன் மற்றும் பரை | 7-வது தலைமுறை |
பரம்பரை in English Words:
Inheritance என்பதே பரம்பரை என்ற சொல்லுக்கான ஆங்கிலச்சொல் ஆகும்.
ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |