பரிகாரம் வேறு சொல் | Pariharam Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பரிகாரம் என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு நாம் சொல்லுக்கும் ஒரு அர்த்தமும், அச்சொல்லினை குறிக்கும் வேறு சொல் என்பது இருக்கும். அனைவருமே பரிகாரம் என்ற சொல்லினை பிறர்கூற கேட்டு இருப்போம். ஆனால், பரிகாரம் என்றால் என்ன.? பரிகாரம் என்ற சொலின் வேறு சொல் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆகையால், அதனைத் தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் பரிகாரம் வேறு சொல் பற்றி கொடுத்துள்ளோம். எனவே, நீங்கள் பரிகாரம் என்பதற்கான வேறு சொல் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பரிகாரம் என்றால் என்ன.?
பரிகாரம் என்பது ஒரு பிரச்சினையின் அடிப்படைக் காரணத்தை சரிசெய்வதற்கான செயல் அல்லது நடவடிக்கை ஆகும். அதாவது, ஏதேனும் ஒரு பிரச்சனை அல்லது சிக்கலை சரிசெய்வதற்கான வழி ஆகும். எடுத்துக்காட்டாக, ஒரு நபர் தவறு செய்தால், அவர் மன்னிப்பு கோரி மன்னிப்பு பெறுவது பரிகாரமாக செயல்படும். அதேபோல், ஆன்மீகத்தில், நமக்கு இருக்கும் இன்னல்கள் நீங்க, கடவுள்களை வணங்கி பல்வேறு பரிகாரங்களை செய்வார்கள்.
உதாரணமாக, திருமண வரம் இல்லாதவர்கள், இந்த கோவிலுக்கு சென்று கடவுளை இந்த நேரத்தில் இவ்வாறு வணங்கி வந்தால் திருமணம் கைகூடி வரும் என்று கூறுவார்கள். இதுவும் ஒரு பரிகாரம் ஆகும்.
எனவே பரிகாரம் என்பது ஒரு பிரச்சினையை நீக்குவதற்கான வழியை வழங்குகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
பரிகாரம் என்பதன் வேறு சொல்:
- நீக்குகை
- கழுவாய்
- மாற்று உதவி
- மருத்துவம்
- காத்தல்
- கேடுநீங்கக் கூறும் வாழ்த்து
- வழுவமைதி
- விலக்கு
- பொருள்
- கப்பம்
- பெண்மயிர்
மேலே, கூறியுள்ள சொற்கள் அனைத்தும் பரிகாரம் என்ற சொல்லினை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும்.
வீட்டில் செல்வம் செழிக்க எளிமையான கல் உப்பு பரிகாரம்..!
பரிகாரம் in English:
பரிகாரம் என்ற சொல்லினை ஆங்கிலத்தில் Restitution, Atonement, Amends, Provisions மற்றும் Remedy என்று கூறுவார்கள். பெரும்பாலும், Remedy என்று தான் கூறுவார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.