பிச்சை வேறு சொல்

Advertisement

பிச்சை வேறு சொல்

பொதுவாக நம்முடைய தமிழ் வார்த்தைகளில் உள்ள வார்த்தையானது ஒரே பொருளை மட்டும் குறிக்காது. இரு வார்த்தை பல அர்த்தங்களை தர கூடியதாக இருக்கும். இந்த அர்த்தங்கள் ஆனது நாம் பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்தது போல மாறுபடும். வார்த்தைகளுக்கான அர்த்தங்களை தெரிந்து கொண்டு பேசுவது நல்லது. அதுமட்டுமில்லாமல் அரசு பொது தேர்வுகளில் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை கேட்கிறார்கள். இதற்கு பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் பிச்சை என்பதற்கு வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

பிச்சை என்றால் என்ன.?

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் வறுமைக்காக பிறரிடம் கேட்டு வாங்கும் பொருளோ அல்லது பணமோ பிச்சை என்று கூறுகிறோம். இவ்வாறு பெறப்படும் பொருட்களாக இருந்தாலும் சரி, பணமாக இருந்தால் திரும்ப கொடுக்க தேவையில்லை.

வறுமை மனிதனின் வாழ்க்கையில் உடல் அளவிலும் மனதளவிலும் பெரிதும் பாதிக்க கூடியதாக இருக்கிறது. இந்த வறுமையோடு வாழ்க்கையை கடத்துவது பெரிய மன வேதனையை தர கூடியதாகக் இருக்கும். அன்றாட வாழ்க்கையை வாழ்வது இவர்களுக்கு சவாலானதாக இருக்கும்.

எடுத்துக்காட்டு:

அந்த பிச்சன் தினமும் கோவிலின் வாசலில் நின்று பிச்சை பெறுகிறார்.

பிச்சன் போல சுற்றி நடக்காமல், உன் உழைப்பால் சம்பாதி!

பிச்சன் என நினைத்தவனை ராஜா தனது அரசவைக்குள் அழைத்தான்.

அவர் வெறும் பிச்சன் அல்ல, ஆன்மிக ஞானி!

பிச்சை வேறு பெயர்கள்:

பிச்சை வேறு சொல்

  • ஐயம்
  • யாசகம்
  • தருமம்
  • தர்மம்
  • தானம்

பிச்சைக்காரன் வேறு சொல்:

பலருடைய வாழ்வில் வறுமை இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இந்த வறுமை ஆனது ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாத போது அடுத்தவரிடம் கையேந்தும் நிலைமை இருக்கிறது. தன்னுடைய வாழ்க்கையை வாழ்வதற்காக பிறரிடம் உணவோ, பொருளோ, பணமோ மற்றவரிடம் கையேந்தி கேட்கும் ஆண்களை பிச்சைக்காரன் என்று கூறுகிறோம். அதுவே ஒரு பெண் பாலினத்தவராக இருந்தால் பிச்சைக்காரி என்று கூறுவோம்.

எடுத்துக்காட்டு:

அந்த பிச்சைக்காரன் கோவிலின் வாசலில் தினமும் பிச்சை கேட்கிறார்.

உழைக்காமல் இருப்பவன் ஒருநாள் பிச்சைக்காரன் ஆகிவிடுவான்.

தொண்டு வேறு சொல்

பிச்சைக்காரன் வேறு பெயர்கள்:

யாசகன்

இரவலன்

யாசகி(பிச்சைக்காரி)

பிச்சை in English:

பிச்சை என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கலாம் என்று கீழே பார்த்து அறிந்து கொள்வோம் வாங்க..

  • Alms
  • Begging
  • Pituitary
  • Dole
இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement