பிடிவாதம் வேறு சொல்
நாம் தாய்மொழியில் சரளமாக பேசுகின்றோம், எழுதுகின்றோம். ஆனால் இதில் நமக்கு தெரியாத வார்த்தைகளும், அர்த்தங்களும் நிறைய இருக்கிறது. பள்ளியில் படிக்கும் போது ஒரு சொல் பல பொருள் பற்றி படித்திருப்போம். அதெல்லாம் படித்ததோடு சரி அதன் பின் டச் இல்லாமல் அந்த ஒரு சொல்லிற்கான பல பொருள் பற்றி தெரிவதில்லை. நமது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கும் பாட புத்தகத்தில் இருக்கும், அதனை பார்க்கும் போது தான் நாமும் இதை படித்தோமே என்று ஞாபகத்திற்கு வரும். இதற்கான விடைகளை கேட்கும் போது நமக்கு தெரியாது பார்த்து சொல்கிறேன் என்று மொபைலில் போட்டு சர்ச் செய்வோம். அதனால் தான் இந்த பதிவில் பிடிவாதம் என்ற சொல்ல வேறு எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பிடிவாதம் என்றால் என்ன.?
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் அச்சம், கோபம், வெறுப்பு போன்ற குணங்களை போலவே பிடிவாதமும் ஒன்றாக இருக்கிறது. இந்த பிடிவாதம் குணமானது எவன் ஒருவனிடம் இருக்கிறதோ அவை யார் சொல்வதையும் கேட்க மாட்டார்கள்.
அவர்கள் ஒரு முடிவு எடுத்து விட்டார்கள் என்றால் யார் சொல்வதையும் கேட்காமல் அவர்கள் முடிவிலே இருப்பார்கள். அது போல எந்த விஷயத்தில் ஆவது விட்டு கொடுக்கவும் மாட்டார்கள். இந்த குணமானது மற்றவர்களுக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்தும்.
சுருக்கமாக இந்த குணத்தை ஒரு பழமொழி வாயிலாக கூறலாம். அதவாது நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இருப்பார்கள்.
பிடிவாதம் வேறு சொல்:
- விடாபிடி
- அடம்
- அழிச்சாட்டியம்
- முரண்டு
- வீம்பு
- அடங்காமை
- முரட்டுத்தன்மை
பிடிவாதம் in english:
பிடிவாதம் என்பதை Stubbornness என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |