பிரமாதம் என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

பிரமாதம் வேறு சொல் | Pramadham Veru Sol in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பிரமாதம் என்ற சொல்லிற்கான வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லிற்கும் ஒரு அர்த்தமும், அதனை குறிக்கும் வேறு சொற்களும் இருக்கும். ஆனால், நம்மில் பலருக்கும் எல்லா சொல்லிற்குமான வேறு சொற்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இதுபோன்ற வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்வது அவசியம் .

வேறு சொற்கள் பற்றி பல்வேறு தேர்வுகளில் கேட்பார்கள். குறிப்பாக போட்டி தேர்வுகளில் தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி கேட்பார்கள். எனவே, பள்ளி படிக்கும் குழந்தைகள் முதல் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைவரும் வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். எனவே, வேறு சொற்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில், நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம்.

வேகம் என்பதன் வேறு சொல் என்ன.?

பிரமாதம் என்பதன் வேறு சொல்:

பிரமாதம் என்பதை நேர்த்தி, அருமை, சிறப்பு, அற்புதம், அளவின் மிக்கது என்றெல்லாம் கூறுவார்கள். பிரமாதம் என்பதை, நாம் இக்காலத்தில் எவ்வளவு பிரமாதமா இருக்கு என்று பாராட்டி கூறுவோம். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இச்சொல்லினை அப்படியே தலைகீழாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அதாவது, பிரமாதம் என்ற சொல் ஆனது,  பண்டைய தமிழில் தவறு என்று பொருள்படும். அக்காலத்தில் பிரமாதம் என்றால் அபாயம், அலட்சியம் என்று கூறுவார்கள். 

ஒன்றினை பாராட்டும் விதமாக பிரமாதம் அல்லது அற்புதம் என்ற சொல்லினை பயன்படுத்துகிறோம். பிரமாதம்,  அற்புதம் இவை இரண்டுமே சமஸ்கிருத மூல சொற்கள் ஆகும்.

‘ப்ரமாத’ என்ற சம்ஸ்கிருத சொல்லிற்கு மயக்கத்தைத் தரக்கூடியது மற்றும் பைத்தியக்காரத்தனம் என்ற இரண்டு அர்த்தம் உள்ளது.

“ப்ரமத” என்ற சம்ஸ்கிருத சொல்லிற்கு மகிழ்ச்சி அல்லது போதை என்ற அர்த்தம் உள்ளது.

அதேபோல், ‘ப்ரமோத’ என்ற சம்ஸ்கிருத சொல்லிற்கு பெருமகிழ்ச்சி, கொண்டாட்டம் என்ற அர்த்தமும் உள்ளது.

எனவே, மேலே கூறப்பட்டுள்ள மூன்று சம்ஸ்கிருத சொற்களில் இருந்து தான் பிரமாதம் என்ற சொல் தோன்றியிருக்க கூடும்.

துணிச்சல் என்பதன் வேறு சொல்..!

பிரமாதம் Meaning English:

பிரமாதம் என்பதை ஆங்கிலத்தில் Awesome என்று கூறுவார்கள்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement