பிரமிப்பு வேறு சொல் | Piramippu Veru Sol in Tamil..!
பொதுவாக நாம் அனைவருக்கும் எப்போது பார்த்து கொண்டிருக்கும் ஒரு பொருளை தொடர்ந்து பார்க்க விரும்புவது இல்லை. ஏனென்றால் நமது நமது கண்களும் சரி, நம்முடைய மனதும் சரி எப்போதும் புது புது விஷயங்களை பார்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால் நினைக்கிறது என்பதை விட தேடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதன் படி பார்த்தால் சில விஷயங்களை பார்க்கும் போது அழகாகவும், வியப்பாகவும் இருக்கும்.
இவ்வாறு நம்மை நாமே மெய்மறந்து சில விஷயங்களை பார்க்கும் போது நமக்கு தோன்றும் வார்த்தைகளை எல்லாம் கூறுவோம். அதாவது Awe, Surprise என இத்தகைய வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவோம். அந்த வகையில் ஆங்கிலத்தில் இவ்வாறு பல வார்த்தைகளை ஆனா தமிழில் பிரமிப்பு என்ற ஒரு சொல்லை மட்டும் தான் பயன்படுத்துகின்றோம். எனவே இன்றைய பதிவில் பிரமிப்பு என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் என்ன என்பதை தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
பிரமிப்பு வேறு சொல்:
- திகைப்பு
- வியப்பு
- மயக்கம்
- கலக்கம்
- குழப்பம்
- ஆச்சரியம்
- அதிசயம்
- வினோதம்
- மலைப்பு
- விசித்திரம்
மேலே சொல்லப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் பிரமிப்பு என்ற சொல்லுக்கான வேறு பெயர்கள் ஆகும்.
பிரமிப்பு என்றால் என்ன..?
நாம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் நினைக்காத ஒன்று அல்லது எதிர்பார்க்காத ஒன்று நடைபெறும் போது நம்மை அறியாமலே ஏற்படும் ஒரு விதமான உணர்ச்சியே பிரமிப்பு ஆகும்.
இத்தகைய பிரமிப்பு ஆனது நல்லது அல்லது கெட்டது என நம்மால் கணித்து சொல்ல இயலாது. ஆகவே எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
எடுத்துகாட்டாக:
எனது சொந்த கிராமத்திற்கு பல வருடங்கள் கழித்து சென்ற போது நாம் மிகவும் திகைத்து போனேன். ஏனென்றால் அங்கு உள்ள குடிசை வீடுகள் அனைத்தும் மாறி மாடி வீடு, பள்ளிக்கூடம் மற்றும் பேருந்து வசதி என இவை அனைத்துமே மாறி இருந்தது.
பிரமிப்பு in English Words:
பிரமிப்பு என்ற தமிழ் சொல்லுக்கு நிகரான ஆங்கில வார்த்தைகள் கீழ் உள்ள அனைத்துமே ஆகும்.
- Amazement
- Astonishment
- Surprise
- Bewilderment
- Confusion
- Perplexit
பிரமிப்பு எதிர்ச்சொல்:
பிரமிப்பு என்பதன் எதிர்சொல் சாதாரணம் ஆகும்.
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |