புகழ்ச்சி வேறு சொல்

Advertisement

புகழ்ச்சி வேறு சொல்

பொதுவாக தமிழ் மொழியில் சரளமாக பேசுகின்றோம், எழுதுகின்றோம். ஆனால் இதில் உள்ள பல வார்த்தைகளுக்கான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்காது. தமிழ் மொழியை ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறொரு மாதிரியாக பேசுவார்கள். எடுத்துக்காட்டிற்கு மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் வேறொரு மாதிரியாக பேசுவார்கள். அவர்கள் பேசுவதெல்லாம் புரியும், ஆனால் சில வார்த்தைகள் வேறு மாதிரியாக சொல்வார்கள். அதாவது நாம் புளிக்குழம்பு என்று கூறுவதை அவர்கள் கார குழம்பும் என்று கூறுவார்கள். இது போல் பல வார்த்தைகளுக்கு பல சொற்கள் இருக்கின்றது. அதை பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதிவில் தினந்தோறும் வார்த்தைகளுக்கான பல சொற்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் புகழ்ச்சி என்பதற்கான வேறு சொற்களை அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

புகழ்ச்சி என்றால் என்ன.?

புகழ்ச்சி என்பது மற்றவர்களை பாராட்டுவதை குறிக்கிறது, ஒருவர் செய்கின்ற செயலை பாராட்டி கூறுவது.

எடுத்துக்காட்டு:

பள்ளியில் படிக்கும் மாணவன் நன்றாக படித்து நல்ல மார்க் எடுத்துள்ளான் என்றால் மற்ற மாணவர்களிடம் அவனை பற்றி கூறுவது புகழ்ச்சி ஆகும்.

அதுவே வேலை பார்க்கும் 10 பேர் பார்க்கிறார்கள் என்றால் ஒருவர் மட்டும் நன்றாக வேலை பார்க்கிறார் அவர்களை பற்றி மற்றவர்களிடம் புகழ்ந்து கூறுவார்கள்.

சிறந்த செயல் மற்றும் நீங்கள் வெற்றியை அடையும் போது புகழ்ச்சி கிடைக்கிறது.

புகழ்ச்சி வேறு சொல்:

  1. சிலாகை
  2. துதித்தல்
  3. தோத்திரம்
  4. பரிமளிப்பு
  5. பராட்டுதல்
  6. பூஷித்தல்
  7. மகிமைப்படுத்துதல்
  8. மெச்சுதல்
  9. பராட்டு
  10. துதி

புகழ்ச்சி எதிர்சொல்:

புகழ்ச்சி என்பதற்கு எதிர்சொல் இகழ்ச்சி.

புகழ்ச்சி ஆங்கில வார்த்தை:

புகழ்ச்சில் என்பதை Praise என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

கம்ப்யூட்டர் தமிழ் சொல்

ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 

 

Advertisement