Pudhalvan Veru Peyargal in Tamil | புதல்வன் பொருள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் புதல்வன் என்றால் என்ன.? புதல்வன் என்பதற்கான வேறு பெயர்கள் என்ன.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். புதல்வன் என்ற வார்த்தையினை நாம் அனைவருமே அதிகமான இடங்களில் கேட்டு இருப்போம். ஆனால், நம்மில் பலருக்கும் புதல்வன் என்பதற்கான வேறு பெயர்கள் என்ன என்பது தெரிந்திருக்காது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
புதல்வன் என்பது ஒரு ஆண்மகனை குறிக்கும் சொல் ஆகும். புதல்வன் என்ற வார்த்தையினை திருமண பத்திரிகையில் அதிகமாக பார்த்து இருப்போம். அப்போது தான், புதல்வன் என்றால் மகன் என்று அறிந்து கொள்வோம். அதேபோல், புதல்வன் என்பதற்கு மகனை தவிர்த்து பல பெயர்கள் உள்ளது. அதனை பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு பெயர்கள் /வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். ஆகையால், நீங்கள் வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ் புதல்வன் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா.?
புதல்வன் Meaning in Tamil:
புதல்வன் என்பது ஒரு தமிழ் சொல் ஆகும். இது குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளையை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. புதல்வன் என்றால் மகன் அல்லது மாணாக்கன் என்பதை குறிக்கும் தமிழ் சொல் ஆகும். அக்காலத்தில் எல்லாம் மகனை புதல்வன் என்று தான் அழைப்பார்கள். இக்காலத்தில் மகன் என்று கூறினாலும், திருமண பத்திரிகையில், புதல்வன் என்றே குறிப்பிடுவார்கள். ஆக புதல்வன் என்பது மகனை குறிக்கும் தூய தமிழ் பெயராகும். பல ஆண்குழந்தைகள் இருந்தால் அவர்களை புதல்வர்கள் என்று குறிப்பிடுவார்கள்.
புதல்வன் வேறு பெயர்கள்:
- மகன்
- மைந்தன்
- குமரன்
- குமாரன்
- மாணாக்கன்
- இளவன்
மேலே கூறியுள்ள பெயர்கள் அனைத்தும் புதல்வன் என்பதற்கான வேறு பெயர்கள் ஆகும்.
புதல்வன் in English:
புதல்வன் என்பதை ஆங்கிலத்தில் Son என்று அழைப்பார்கள்.
புதல்வன் எடுத்துக்காட்டு வாக்கியம்:
- அவருக்கு இரண்டு புதல்வர்கள் உள்ளனர்.
- அவருக்கு ஓரே ஒரு புதல்வன் மட்டும் தான்.
- என்னுடைய புதல்வன் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளான்.
- அந்த புதல்வன் மிகவும் திறமையானவன்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |