பூந்தோட்டம் வேறு சொல் | Poonthottam Veru Sol
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பூந்தோட்டம் என்பதற்கான வேறு பெயர்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக, பூந்தோட்டம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஒருபரந்த மற்றும் பெரிய நிலப்பரப்பில் பல்வேறு வகையான பூச்சட்டிகளை நட்டு வைத்து, அதில் உருவாகும் பூக்களை பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். பூந்தோட்டத்தில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பூந்தோட்டம் பிடிக்கும்.
இந்த பூந்தோட்டத்தை வேறு எப்படியெல்லாம் கூறுவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா.? அப்படி தெரியவில்லை என்றால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க, இப்பதிவில் பின்வருமாறு பூந்தோட்டம் என்பதற்கான வேறு சொற்கள் பற்றி கொடுத்துள்ளோம். பொதுவாக, வேறு சொற்கள் பற்றி நாம் அனைவருமே அறிந்து கொள்வது அவசியம். வேறு சொற்கள் பற்றிய பல கேள்விகள் தேர்வுகளில் கேட்கப்படும். எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில், நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம்.
மழைக்காலம் என்பதன் வேறு சொல் என்ன.?
பூந்தோட்டம் என்றால் என்ன.?
பூந்தோட்டம் என்பது ஒரு பெரிய பரந்த நிலப்பரப்பில், பல்வேறு வண்ணங்களை உடைய பூக்களை வளர்க்கப்படும் இடம் ஆகும். பெரும்பாலும், பூந்தோட்டங்கள், அமைதி மற்றும் அழகினை ரசிக்கும் இடமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்க விரும்பும் இடமாக பூந்தோட்டம் இருக்கிறது.
வீட்டில் அதிக இடம் இருப்பவர்கள், வீட்டிலேயே பூந்தோட்டம் அமைத்து ரசிப்பார்கள். சுற்றுசூழலை அழகுபடுத்துவதில் பூந்தோட்டத்திற்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. பூந்தோட்டத்தை பார்த்தாலே மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
மேலும், முக்கியமாக பூந்தோட்டத்தில் வளர்க்கப்படும் ஒரு சில மலர்கள் மருந்தாகவும், உணவு பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பூந்தோட்டம் வேறு பெயர்கள்:
- நந்தவனம்
- சோலை
- பூங்கா
- பூந்தோப்பு
- மலர்வனம்
- பூங்காவனம்
- பூஞ்சோலை
- மலர்த்தோட்டம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் பூந்தோட்டம் என்பதற்கான வேறு சொல்/பெயர்கள் ஆகும். பூச்செடிகள் அதிகமாக இருந்தால், அதனை பூந்தோட்டம் என்று கூறுவார்கள். அதுவே, பூ மரங்கள் அதிகமாக இருந்தால் அதனை பூந்தோப்பு என்று கூறுவார்கள்.
முதுமை என்பதன் வேறு சொல் என்ன.?
பூந்தோட்டம் English Name:
பூந்தோட்டம் என்பதனை ஆங்கிலத்தில் Flower Garden, Park என்று கூறுவார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |