பேட்டி வேறு சொல்
உயிர் எழுத்து 12, மேல் எழுத்து 18, உயிர்மெய் எழுத்து 216, ஆயுத எழுத்து 1 ஆக மொத்தமாக 247 எழுத்துக்கள் அடங்கியது தமிழ் எழுத்துக்கள். இத்தனை எழுத்துக்கள் கொண்ட தமிழில் சரளமாக பேசுகின்றோம், எழுதுகின்றோம். ஆனால் ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தத்தை கேட்டால் தெரியுமா என்றால் பெரும்பாலானவர்களின் பதில் இல்லை என்று வரும்.
நாம் பேசும் தமிழ் மொழிகளில் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. அர்த்தங்கள் போலவே பல சொற்களும் இருக்கிறது. அதாவது நீங்கள் கஷ்டம் என்ற வார்த்தைக்கு கவலை, துன்பம் என்று பல வார்த்தைகளில் அழைக்கலாம். அது போல இன்றைய பதிவில் பேட்டி என்ற வார்த்தைக்கான வெறி சொற்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
பேட்டி என்றால் என்ன.?
பேட்டி என்பது கேள்விகள் கேட்டு பதில்களைப் பெறும் ஓர் உரையாடல் ஆகும். அதாவது பொதுவாக கேள்விகள் கேட்கும் ஒருவரும் பதில்கள் தருபவர் ஒருவருமாக ஒன்றுக்கு ஒன்று உரையாடலாகவே இருக்கும். பேட்டி என்பது பல்வேறு காணப்படுகிறது.
பேட்டி என்பது ஓவ்வொரு துறையை பொறுத்து மாறுபடுகிறது. ஆனால் இவை இரு நபருக்கிடையே தான் நடக்கும். அது போல கேள்விகளும் மாறுபட்டதாக இருக்கும்.
நீங்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் உங்களுக்கான கேள்விகள் வேறு மாதிரி இருக்கும்.
அதுவே படம் வெற்றிகரமாக ஓடி விட்டால் அவர்களுக்கான பேட்டி வேறு மாதிரி இருக்கும்.
பேட்டி வேறு சொல்:
பேட்டி என்பதை எவ்வாறெல்லாம் அழைக்கலாம், என்று கீழே பார்த்து அறிந்து கொள்வோம் வாங்க..
- நேர்காணல்
- செவ்வி
நேர்காணல் வகைகள்:
- தெருவில் காண்போர் நேர்காணல்
- தற்செயல் நேர்காணல்
- ஆளுமை விளக்க நேர்காணல்
- செய்தி நேர்காணல்
- செய்திக் கூட்ட நேர்காணல்
- செய்திச் சுருக்க நேர்காணல்
- சிற்றுண்டிக் கூட்ட நேர்காணல்
- தொலைபேசி நேர்காணல்
- அடைகாத்தல் நேர்காணல்
- பட்டம் பறக்கவிடும் நேர்காணல்
- மின்னஞ்சல் நேர்காணல்
- நிகழ்பட உரையாடல் நேர்காணல்
பேட்டி in English:
பேட்டி என்பதை ஆங்கிலத்தில் Interview என்று அழைக்கலாம்.
பேட்டியின் பயன்கள்:
- செய்திகளை உருவாக்குதல்
- வேறுபாடுகளை கண்டறிதல்
- பொதுமக்கள் கருத்தை உருவாக்க முடியும்.
- அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் அறிய துணை செய்தல்
- கண்டுபிடிப்புகள், திட்டங்கள் விளக்குதல்
- சமுதாயத்தில் புகழ் பெற்றவர்கள் – வாசகர்கள் ஆகியோர்க்கு இணைப்பாக இருத்தல்
- பல்வேறு கருத்துக்கள் வெளிவர வாய்ப்பாக இருக்கும்.
- ஒரு கதையை உருவாக்குவதற்கு காரணமாக இருக்கிறது.
நேர்காணல் வேறு சொல்:
நேர்காணல் என்பது வேலைக்கு அப்பளை செய்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அப்போது வேலைக்கு உங்களை எடுக்கிறார்கள் என்பதை செலக்ட் செய்வதற்கு நேர்காணல் வைப்பார்கள். அதாவது Interview என்று கூறியிருப்பார்கள். இதனை தான் தமிழில் நேர்காணல் என்று கூறுவார்கள்.
நேர்காணல் என்பதனை பாலால் வார்த்தைகளால் அழைக்கலாம். அதாவது பேட்டி, சந்திப்பு, விசாரணை போன்ற வார்த்தைகளால் அழைக்கலாம்.
நாவல் என்றால் என்ன அதனின் வேறு பெயர்கள்..
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |