போக்குவரத்து விதிமுறைகள் – Pokkuvarathu Thurai Vithigal
நமது இந்தியாவில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து சில விதிகள் மற்றும் பாதுகாப்பு மீறல்கள் தொடர்பாக நிபந்தனைகளை அறிவித்துள்ளது என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் காலில் செருப்பு அணிந்துகொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம் செருப்பு அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000/- அபராதம் ஆகும். இது போன்று மோட்டார் வாகன விதிமுறைகளை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க நாம் அறிந்திடாத போக்குவரத்து விதிகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.
போக்குவரத்து விதிமுறைகள்: 1
இந்தியாவில் மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகனம் ஓட்டும் போது நீங்கள் சரியான உடைகளை அணிந்து இருக்க வேண்டும். அதிலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தில் செல்லும் போது முழுமையாக மூடிய காலணிகளை அணிய வேண்டும். சாதாரண செருப்போ அல்லது சப்பல் அணிந்து வாகனம் ஓட்டினால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 2-யின் விளக்கம் |
போக்குவரத்து விதிமுறைகள்: 2
பொதுவாக தீயணைப்புப் படை, ஆம்புலன்ஸ், போலீஸ் கார் உள்பட எந்தவொரு அவசர சேவை வாகனத்திற்கும் வழி வழிவிட வேண்டியது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள கடமையாகும். ஆனால் யாராக இருந்தாலும் அத்தகைய வாகனத்தின் பாதையை தடுப்பது அல்லது குறுக்கீடு செய்வது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 143 விளக்கம் |
போக்குவரத்து விதிமுறைகள்: 3
பொதுவாக வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசிக்கொண்டு வரக்கூடாது என்று அனைவருக்கும். அப்படி வந்தால் கண்டிப்பாக தண்டனை வழங்கப்படும். ஆனாலும் கூட இதில் விதிவிலக்கு உள்ளது. எந்தவொரு ஓட்டுனரும் தங்கள் வாகனத்தை இயக்கும் போது, வழி கேட்பதற்காக செல்போன் பயன்படுத்தஅனுமதி வழங்கப்படும். ஆனால் இதை தவிர வேறு எதற்கு செல்போனை பயன்படுத்தினாலும் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 447-யின் விளக்கம்..! |
போக்குவரத்து விதிமுறைகள்: 4
ஒருவரிடம் இரண்டு ஓட்டுநர் உரிமம் இருக்கிறது என்றால், அதனை அதிகாரிகள் கண்டறிந்தால் அதற்கு அந்த நபர் அபராதம் செலுத்த வேண்டும். இரண்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது என்பது சட்டப்படி குற்றமாகும். ஆக அவ்வாறு செய்த செய்த குற்றத்திற்காக கண்டிப்பாக தண்டை வழங்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் 376 |
போக்குவரத்து விதிமுறைகள்: 5
எந்தவொரு நபரும் மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ வாகனம் ஓட்டுவதற்கு தகுதியற்றவராக இருந்தால், அவர் வாகனம் ஓட்டக்கூடாது. அவ்வாறு தகுதியற்றவர் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால், முதல் முறை ரூ.1,000 அபராதமும், இரண்டாவது முறை ரூ.2,000 அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |