மதில் வேறு பெயர்கள்..! | Mathil Veru Sol In Tamil..!

Advertisement

மதில் வேறு சொல்

வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுநலம் வலைத்தளத்தில் தினமும் ஒவ்வொரு சொல்லுக்கான வேறு சொல்லை பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று மதில் வேறு சொல்லை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் வெவ்வேறு வேறு சொற்கள் இருக்கிறது. ஒரு சொல்லுக்கான பொருள் ஒன்று தான் ஆனால் அதை பல்வேறு வகையில் வெவ்வேறு சொற்களை வைத்து அழைப்பார்கள்.

பண்டைய காலங்களில் பயன்படுத்தி வந்த சொற்கள் கால மாற்றத்தில் மாற்றடைந்துவிட்டது. நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வந்த சொற்களுக்கு கூட பண்டைய காலங்களில் வேறு சொற்கள் இருந்திருக்கின்றன. மதில் என்னும் சொல்லும் அப்படி தான் மாற்றம் அடைந்திருகின்றது. எனவே இன்றைய பதிவில் மதில் சொல்லுக்கான வேறு சொல்லை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

மிருது வேறு சொல்

மதில் என்றால் என்ன?

  • மதில் என்றால் ஒரு நிலப்பகுதியைச் சுற்றியோ அல்லது ஒரு இடத்தையோ எல்லைப்படுத்தும் பெரிய சுவரைக் குறிக்கும்.
  • ஒரு நிலப்பகுதியைச் சுற்றி, அதன் எல்லை வழியே அமைக்கப்படும் சுவரே மதில் ஆகும்.
  • எந்த ஒரு கட்டிடத்திற்கும் சுவர் எழுப்புவது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
  • இந்த சுவர் என்னும் சொல்லை தான் பண்டைய காலத்தில் மதில் என்று அழைத்தார்கள்.
  • மதில் என்னும் சொல் காலப்போக்கில் மருவி சுவர் என்றாகிவிட்டது.

மதில் வேறு பெயர்கள்:

  • மதிற்சுவர்
  • சுற்றுமதில்
  • கோட்டைமதில்
  • பெரிய வெளிப்புறச் சுவர்
  • சுவர்
  • சுவரின் மேற்கட்டு

மதில் In English:

  • Wall Around A Fort
  • Fence
  • Wall
  • Rampart
  • Compound Wall

எடுத்துக்காட்டு:

  • பழநி கோவிலின் மதிற்சுவர் மிகவும் உயரமாக உள்ளது.
  • பள்ளியின் சுற்றுமதில் பழுதடைந்து சரி செய்யப்பட்டது.
  • சிவகங்கை கோட்டையின் கோட்டைமதில் இன்னும் உறுதியாக நிற்கிறது.
  • அந்த அருங்காட்சியகத்துக்கு பெரிய வெளிப்புறச் சுவர் உள்ளது.
  • அறையின் சுவர் வெள்ளை நிறத்தில் பூச்சு செய்யப்பட்டிருந்தது.
  • வீட்டு சுவரின் மேற்கட்டில் அழகான வடிவம் பொறிக்கப்பட்டது.

திறமை வேறு சொல்

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement