மழலை என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன.?

Advertisement

மழலை வேறு சொற்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மழலை என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, தமிழ்மொழியில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேறு சொல் என்பது இருக்கும். ஆகையால், அதனை பற்றி நமக்கு தெரியாது. ஆனால், தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள அர்த்தத்தையும் அதற்கான வேறு சொல்லையும் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் தினமும் பல வேறு பெயர்கள் மற்றும் அர்த்தம் பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மழலை என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்பதை விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

மழலை Meaning in Tamil:

மழலை என்றால் குழந்தை மொழி என்பதாகும். வயதில் மிகவும் சிறிய
குழந்தைகளின் செவிக்கினிய குளறல் பேச்சு தான் மழலை.

எடுத்துக்காட்டாக, குழந்தைகள் பேசுவதை மழலை பேச்சு என்று கூறுவார்கள். அதாவது, அறியாத வயதில் மனதில் எந்தவொரு கள்ளம் கபடம் இல்லாமல், பேசுவது தான் மழலை பேச்சு. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் மழலை என்றால்  குழந்தைகளின் திருந்தாச்சொல் என்று பொருள் கொள்ளலாம்.

மழலை பாடல்கள்..!

மழலை திருக்குறள்:

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர். (திருக்குறள் – 66 )

திருக்குறள் பொருள்:

மு.வ உரை:

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

கலைஞர் உரை:

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:

பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

இந்த திருக்குறளின் மூலம் நீங்கள் மழலை என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

மழலை வேறு பெயர்கள்:

  • மென்மொழி
  • குழந்தை மொழி
  • இளமை
  • மெல்லோசை
  • குதலைப் பேச்சு

மழலை in English:

மழலை என்றால் ஆங்கிலத்தில் Babble என்பது அர்த்தமாக இருக்கிறது.

சிறுவன் என்பதை வேறு எவ்வாறெல்லாம் குறிப்பிடுவார்கள் தெரியுமா..?

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement