மழைக்காலம் என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

மழைக்காலம் வேறு சொல் | Malaikalam Veru Sol 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மழைக்காலம் என்பதனை வேறு எப்படியெல்லாம் கூறலாம் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். மழைக்காலம் என்ற சொல்லிற்கான வேறு சொல் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மழைக்காலம் என்றாலே ஒரு சிலருக்கு பிடிக்கும்.! ஒரு சிலருக்கு பிடிக்காது. பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும் என்றே சொல்லலாம்.

சரி விஷயத்துக்கு வருவோம். பொதுவாக, தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தமும் அதனை குறிக்கும் வேறு சொற்களும் இருக்கும். ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற வேறு சொற்கள் சம்மந்தமான கேள்விகள் போட்டி தேர்வுகளில் அதிகமாக கேட்கப்படும். எனவே, இதுபோன்ற வேறு சொற்கள் பற்றி நாம் அனைவருமே தெரிந்திருக்க வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மழைக்காலம் என்பதன் வேறு சொல் என்ன என்பதை கொடுத்துள்ளோம்.

மழைக்காலம் என்பதன் வேறு சொல்:

மழைக்காலம் வேறு சொல்

மழைக்காலம் = மழை + காலம் 

 மழைக்காலம் என்பதன் வேறு சொல் மாரிக்காலம் ஆகும். அதாவது, மழைக்காலத்தை மாரிக்காலம் என்றும் கூறலாம்.  

மழை வருவதற்கு உரிதான காலம் மழைக்காலம் ஆகும். ஒரு ஆண்டில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாதங்கள் சராசரியாக தொடர்ந்து மழைவீழ்ச்சியை பெரும் காலமே மழைக்காலம் என்று அழைக்கப்படுகிறது.  மழை பெய்யும் மாதங்களை பொறுத்து அதற்கு தனிப்பெயர் கூறுவார்கள் . எடுத்துக்காட்டாக, ஐப்பசி மாதம் அடைமழை என்று கூறுவார்கள். ஐப்பசி மாதத்தில் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கும். இதனால், ஐப்பசி மாதம் அடைமழை என்று கூறுவார்கள்.

மழைக்காலத்தில் துணிகளில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க டிப்ஸ்..!

தமிழில் 14 வகையான மழைகள் உள்ளது. அவை பின்வருமாறு:

  1. மழை
  2.  மாரி
  3. தூறல்
  4.  சாரல்
  5. ஆவி
  6. சோனை
  7. பெயல்
  8. புயல்
  9. அடைமழை
  10. கனமழை
  11. ஆலங்கட்டி
  12. ஆழிமழை
  13. துளி மழை
  14. வருள் மழை

இவற்றில் நமக்கு பெரும்பாலும், அடைமழை மற்றும் ஆலங்கட்டி மழை பற்றி மட்டுமே தெரியும். அடைமழை என்றால் ஐப்பசி மாதத்தில் பெய்யும் மழை. ஆலங்கட்டி மழை என்றால் பனிக்கட்டிகள் மற்றும் பெரிய மழைத்துளியுடன் பெய்வது.

மழைக்காலம் in English:

மழைக்காலம் என்பதை ஆங்கிலத்தில் Monsoon அல்லது Rainy season என்று கூறுவார்கள்.

மழைக்காலத்தில் உங்களது பைக்குகள் பழுதாகாமல் இருக்க சில டிப்ஸ்..!

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement