மாப்பிள்ளை வேறு சொல்
நம்முடைய நாட்டில் தாய்மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. இது போல ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழி தாய்மொழியாக இருக்கிறது. மொழிகளில் பலவகைகள் இருக்கிறது. நாம் மற்ற மொழிகளை பற்றி அறிந்து கொள்ளா விட்டாலும் பரவாயில்லை, நம்முடைய தாய் மொழியை பற்றி அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் நம்முடைய தமிழ் மொழிகளிலே நமக்கு தெரியாத வார்த்தைக்கான அர்த்தங்கள் பல இருக்கிறது. அதனால் எல்லா வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
அது வார்த்தைக்கான அர்த்தங்கள் மட்டுமில்லை வேறு சொற்களும் இருக்கிறது, அதாவது பள்ளி பருவத்தில் ஒரு சொல் தரும் பல சொற்கள் பற்றி படித்திருப்போம். எடுத்துக்காட்டாக மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கு சந்தோசம், ஆனந்தம் என்ற வார்த்தைகளாலும் அழைக்கலாம். இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் மாப்பிள்ளை என்பதற்கான சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
மாப்பிள்ளை என்றால் என்ன.?
மாப்பிள்ளை என்பவர் மகளின் கணவனை அழைக்கும் சொல்லாக இருக்கிறது. மாப்பிள்ளை மற்றும் மாட்டு பெண் இரண்டு சொற்களும் ஒரே சொல்லி இருந்து பெறப்பட்டது. மாப்பிள்ளை என்பது மணாளப்பிள்ளை என்ற வார்த்தையிலிருந்து வந்தது. மணாட்டுப் பெண் என்ற வார்த்தையிலிருந்து வந்தது தான் மாட்டு பெண். பெற்றோர் தன் பிள்ளைகளைப்போலவே தன் மகளின் கணவனையும் தன் மகனாகவே கருதுவார்கள்.
மணவாட்டி + பெண் = மணாட்டுப் பெண் =மாட்டுப் பெண்.
மணவாளன் + பிள்ளை = மணாளப்பிள்ளை= மாப்பிள்ளை
ஒரு வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அந்த பெண்ணை திருமணம் செய்யும் ஆண்களை மாப்பிள்ளை என்று அழைப்பார்கள். எங்க வீட்டு மாப்பிள்ளை என்று மற்றவர்களிடம் கூறுவார்கள். அதுவே மகன் இருந்து அவனை திருமணம் செய்யும் பெண்களை மருமகள் என்று அழைப்பார்கள்.
மணாட்டுப் பெண் > மாட்டுப் பெண்.
மாப்பிள்ளை, என்று சொல்லாமல் இதனை பல வார்த்தைகளில் அழைக்கலாம், அதனை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
மாப்பிள்ளை வேறு பெயர்கள்
- மருமகன்
- மணவாளன்
- மகளின் கணவன்
மாட்டு பெண் வேறு பெயர்கள்:
- மணமகள்
- மருமகள்
மேல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளால் மாட்டு பெண் என்று அழைக்கலாம், மாட்டு பெண் என்று பிராமிணர் வழக்கத்தில் பயன்படுத்துகிறார்கள்.
மாப்பிள்ளை in English:
மாப்பிளை என்பதை ஆங்கிலத்தில் எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
- Groom
- Son-in-law
சக்கரம் என்பதை வேறு எப்படிஎல்லாம் சொல்லலாம்..?
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |