முட்டாள் வேறு சொல்
இன்றைய சூழலில் நமது உலகம் அனைத்தும் பலவகையில் அபரிவிதமான வளர்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கின்றது. அதனால் நாம் அதற்கு ஏற்றார் போல் நம்மையும் நமது அறிவு திறனையும் நன்கு வளர்த்து கொள்ள வேண்டும். அப்படி வளர்த்து கொள்ள வேண்டும் என்றால் நாம் முதலில் அனைத்தையும் தேடி தேடி கற்று கொள்ள வேண்டும். நாம் மற்ற தகவல்களை கற்று கொள்வதற்கு முன்னால் நமது தாய்மொழியான தமிழ் மொழியை பற்றி முழுமையாக தெரியுமா..? என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும்.
அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு வார்த்தையான முட்டாள் என்பதை குறிக்கும் வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
முட்டாள் என்றால் என்ன..?
முட்டாள் என்ற பெயர் சங்ககாலம் தொடக்கம் பயன்பாட்டில் உள்ளது. அதாவது அந்த காலத்தில் தேரோட்டங்களின் போது தேரின் சக்கரத்தில் முட்டுக் கொடுப்பதன் மூலம் தேரின் வேகத்தைக் குறைக்கவோ, நிறுத்தவோ, திருப்பவோ முடியும்.
தேரோட்டம் நடைபெறும்போது முட்டுக் கொடுப்பதற்கென்று கோவில் நிர்வாகிகள் சில ஆட்களை நியமிப்பார்கள். தேரின் சக்கரங்களுக்கு இடையே லாகவமாக பணியாற்ற வேண்டும். இது சற்று ஆபத்தான பணி. இவர்கள் இல்லாவிட்டால் தேர் முறையாக நகராது. இவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் ஆள் என்று பெயர். முட்டு+ஆள் = முட்டாள்.
இவர்கள் இந்தப் பணியை மட்டும் செய்து வந்தார்களாம். வேறு எந்த வேலையினைச் செய்வதற்கான திறனும் அறிவும் அற்றவர்கள் முட்டு ஆட்கள். என்பது அந்தக் காலத்தில் நிலவிய கருத்து.
எனவே வேறு வேலை செய்வதற்கேற்ற அறிவில்லாதவர்களையும் முட்டாள் (முட்டு ஆள்) என்று அழைக்கத் தொடங்கினார்கள். நாளடைவில் அறிவில்லாதவர்களைக் குறிப்பதற்கு மட்டும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறான முட்டாள் என்ற சொல்லுக்கு தமிழில் வெவ்வேறு சொற்கள் காணப்படுகின்றன. அவற்றை பற்றி இங்கு காணலாம் வாங்க..
முட்டாள் வேறு சொல்:
முட்டாள் என்பதை,
- மடையன்
- மாக்கான்
- அறிவிலி
- அறிவற்றவன்
- புத்தியற்றவன்
- புத்திமத்திமமானவன்
- மூடன்
- மூர்க்கன் போன்ற வேறு சொற்களை பயன்படுத்தி கூட குறிப்பிடுவார்கள்.
| இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |














