முதுமை வேறு சொல் | Muthumai Veru Sol
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முதுமை என்றால் என்ன.? முதுமை என்ற வார்த்தைக்கான வேறு சொல் என்ன.? மற்றும் அதன் எதிர்சொல் என்ன.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக, தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் அதனை குறிக்கும் வேறு சொற்கள் என்பது இருக்கும். ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம்.
வேறு சொற்கள் பற்றி பல்வேறு தேர்வுகளில் கேட்டிருப்பதை நாம் அறிந்து இருப்போம். அதனால், வேறு சொற்கள் பற்று தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில் இன்றைய பதிவில் முதுமை என்றால் சொல்லிற்கான வேறு சொற்கள் பற்றி கொடுத்துள்ளோம். எனவே, நீங்கள் முதுமை என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
முதுமை பொருள் என்ன.? | Muthumai Meaning in Tamil:
முதுமை என்பது மனிதனின் வாழ்நாளில் இறுதி நிலையை/பருவத்தை குறிக்கிறது. இந்நிலை பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை குறிக்கிறது. முதுமை காலத்தில் மனிதன் தனது வாழ்நாளில் அனைத்து பருவங்களையும் கடந்து இறுதியான வாழ்க்கையை வாழ்கின்றான்.
முதுமை என்பது இரண்டாவது, குழந்தை பருவம் என்றே சொல்லலாம். இது மனிதனின் இறுதி காலமாகும். முதுமை காலத்தில் உடல் செயல்பாடுகள் அனைத்தும் குறைந்து உடலில், கண் பார்வை மங்குதல், தசை சுருக்கம், மூட்டு வலி எடை குறைவு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும். முதுமை காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் ஆன்மீக ஈடுபாடு, தியானம் மிகவும் அவசியம். அதுமட்டுமில்லாமல், முதியவர்களை பார்த்துக்கொள்ள உண்மையான உறவுகள் கூடவே இருக்க வேண்டும்.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
முதுமை காரணமாக நாக்கு பேசமுடியாமல் போகும். இறக்கும் தருவாயில் விக்கல் மேலே மேலே வரும். அதற்கு முன் நல்ல தர்மச் செயல்களை ஒருவன் செய்துவிட வேண்டும்.
இதை மட்டும் ஒரு முறை செய்து பாருங்க முதுமையில் கூட நரைமுடி வராது..!
முதுமை என்பதன் வேறு சொல்:
- முதிர்ச்சி
- வயதான நிலை
- வயோதிபம்
- மூப்பு
மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் முதுமை என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் ஆகும்.
Muthumai in English:
முதுமை என்பதை ஆங்கிலத்தில் Old Age/Senility என்று கூறுவார்கள்.
முதுமை எதிர்ச்சொல்:
முதுமை என்பதன் எதிர்சொல் இளமை ஆகும்.
வேகம் என்பதன் வேறு சொல் என்ன.?
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |