முன்னேற்றம் வேறு சொல் | Munnetram Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முன்னேற்றம் என்பதற்கான வேறு பெயர்கள் ) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக நாம் அனைவருக்குமே நாம் பேசும் சில வார்த்தைகளுக்கான வேறு சொல் அல்லது வேறு பெயர்கள் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள் அல்லது பிறர் கூறும் வார்த்தைகளுக்கான அர்த்தம் என்ன என்பது தெரிவதில்லை. இதனால், அந்த சொல்லுக்கு வேறு ஏதெனும் பெயர்கள் இருக்கிறதா என்று அறிந்துகொள்வோம்.
இதுபோன்று வேறு சொற்கள் மற்றும் வேறு பெயர்கள் போன்ற பல்வேறு வகையான பதிவுகளை நம் பொதுநலம் பதிவில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் முன்னேற்றம் (Munnetram Veru Sol in Tamil) என்பதற்கான வேறு பெயர்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
முன்னேற்றம் என்றால் என்ன.?
முன்னேற்றம் என்பது ஒரு விஷயத்தில் உள்ள வளர்ச்சியை குறிக்கிறது. எடுத்துக்காட்டாக தொழிலில் உங்களுக்கு வருமானம் மற்றும் விற்பனை தொடர்ந்து அதிகரித்து, வழக்கமாக வரும் வருமானத்தை விட கூடுதல் வருமானம் வந்தால் அதனை தான் முன்னேற்றம் என்று கூறுவார்கள். இதனை ஒருவரியில் கூறவேண்டுமானால் இருக்கும் நிலையைவிட மேலான, உயர்ந்த நிலையை நோக்கி செல்வது முன்னேற்றம் ஆகும்.
முன்னேற்றம் என்பது இடங்களுக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு விஷயத்திலும் மாறுபாடும். அதாவது, பிறர் நம்மிடம் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டால் முன்பை விட இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்று கூறுவோம். இதற்கு அர்த்தம் என்னவென்றால், உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கிறது என்பது ஆகும்.
முன்னேற்றம் என்பதன் வேறு சொல்:
- வளர்ச்சி
- அபிவிருத்தி
- மேம்பாடு
- உயர்வு
- ஏற்றம்
மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் முன்னேற்றம் என்பதற்கான வேறு சொல் ஆகும். இதனை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சொல்லை பயன்படுத்தி கூறுவார்கள். இருந்தாலும், முன்னேற்றம் என்ற சொல்லினை பெரும்பாலும் வளர்ச்சி என்று தான் கூறுவார்கள். வளர்ச்சி என்று சொன்னால் தான் பெரும்பாலானவர்களுக்கு புரியும்.
முன்னேற்றம் in English:
முன்னேற்றம் என்பதை Progress மற்றும் Growth என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
முன்னேற்றம் எதிர்சொல்:
- தாழ்வு
- இரக்கம்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |