மேக்அப் என்பதன் தமிழ் சொல் என்ன தெரியுமா..?

Advertisement

Makeup Tamil Meaning in Tamil 

வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக தற்போது நாம் அனைவருமே பேசும் வார்த்தைகளை ஆங்கிலம் தமிழ் என்று கலந்து தான் பேசுகிறோம். ஆனால் நாம் பேசும் ஆங்கில வார்த்தைகளை தமிழ் என்றே நினைத்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் தினமும் நம் பதிவின் வாயிலாக பல ஆங்கில வார்த்தைகளின் தமிழ் பெயர்களை அறிந்து கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் இன்று நாம் தெரிந்து கொள்ளப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். அதாவது இன்று நாம் மேக்அப் என்பதன் தமிழ் சொல் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

சோபாவின் தமிழ் பெயர் என்ன தெரியுமா..

மேக்அப் தமிழ் சொல் என்ன..? 

பொதுவாக நாம் அனைவருமே மேக்அப் என்ற வார்த்தையை அதிகம் கேட்டிருப்போம். அதிலும் பெண்களை பற்றி சொல்லவே வேண்டாம். பெண்கள் அன்றாடம் செய்யும் முக்கியமான வேலை என்றால் அது மேக்அப் தான். எதற்கு முக்கியத்துவமும் அதிகளவு நேரத்தையும் செலவு செய்கிறார்கள் என்று கேட்டால் அது மேக்அப்பாக தான் இருக்கும்.

அதிலும், இன்றைய காலகட்டத்தில் மேக்அப் தொழில் தான் அதிகமாக செயல்பட்டு வருகிறது. எங்கு திரும்பினாலும் அழகு நிலையம் என்ற பெயர் தான் அதிகம் தெரிகிறது. அதுபோல பெண்கள் அதிகளவு பணத்தை இதில் தான் செலவு செய்கிறார்கள். அவ்வளவு ஏன் இந்த அழகு சாதன கடை தான் எக்காலத்திற்கும் டிமாண்ட் அதிகம் உள்ள தொழில் என்று சொல்கிறார்.

இன்றைய சூழலில் நாம் வெயில் எங்காவது சென்றாலோ அல்லது ஏதாவது விசேஷமாக இருந்தாலும் நாம் முதலில் செய்வது மேக்அப் தான்.

இந்த மேக்அப்பின் தமிழ் சொல் என்னவென்று  உங்களுக்கு தெரியுமா..?

மேக்அப் என்பதன் தமிழ் சொல் ஒப்பனை என்பதாகும். மேலும் ஒப்பனை என்பதற்கு வேறு என்ன பெயர்கள் இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

கேரட் என்பதன் தமிழ் பெயர் இது தானா..

ஒப்பனை வேறு சொல்:

  • அணி
  • அலங்காரம்
  • கட்டழகு
  • சிங்காரம்
  • சோடனை
  • ஜோடனை
  • புனைவு
  • பொற்பு
  • மினுக்கல்
  • அழகு செய்தல்

இந்த பெயர்கள் எல்லாம் ஒப்பனை என்பதன் வேறு பெயர்கள் ஆகும்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement