Medai Veru Sol in Tamil
தினமும் ஒரு சொல்லுக்கான வேறு சொல் பற்றி நம் பதிவின் வாயிலாக அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் மேடை என்ற சொல்லின் வேறு சொல் மற்றும் வேறு பெயர்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வேறு பெயர்கள் என்பது கண்டிப்பாக இருக்கும். அப்படி இருக்கும் வேறு பெயர்களை நாமும் நம் பொதுநலம்.காம் பதிவின் வாயிலாக அறிந்து வருகின்றோம். அதுபோல மேடை என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்று தெரிந்து கொள்ள நினைத்தால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேடை என்றால் என்ன..?
பொதுவாக மேடை என்றால் என்ன என்று நம்மில் பலருக்கும் தெரியும். நாம் அனைவருமே ஏதாவது ஒரு சூழலில் மேடையில் ஏறியிருப்போம். அதாவது பள்ளி பருவத்தில் சொல்கிறேன்.
மேடை என்பது நம் கலைகளையும், திறமைகளையும் வெளிப்படுத்தும் ஒரு இடமாகும். அதாவது கலை குழுவினரால் நிகழ்த்து கலைகளை வெளிப்படுத்துவதற்கான தளமே மேடை ஆகும்.
அதுபோல மேடை என்பது பார்வையாளர்களுக்கு உண்மையான நிகழ்வாகவும் கலைஞர்களுக்கு கதை வரலாறு, நிகழ்வு சார்ந்த கற்பனையான நிகழ்ச்சிகளை காட்டும் கற்பனை தளமாக உள்ளது.
அதுமட்டுமில்லாமல், பேச்சு, நடிப்பு, இசை, நடனம் போன்றவற்றை ஒரே இடத்தில் இணைத்து தற்போதைய நிகழ்வாக நிகழ்த்தி காட்டுவதற்கு ஒருங்கு பெற்ற தளமே மேடையாகும்.
மேடை வேறு பெயர்கள்:
அதுபோல இந்த மேடை என்ற வார்த்தையை நாம் பல விதங்களில் கூறலாம். அது என்னென்ன என்று தற்போது காண்போம்.
- மேல்
- மேடு
- மேடை
- மிசை
- அரங்கு
- அரங்கம்
- சபை
மேடை என்ற சொல் ஆங்கிலத்தில்:
- Pedestal
- Platform
- Stage
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |