மோட்டார் வாகன சட்டம் மற்றும் அபராதம்
சட்டம் என்பது ஒரு நிறுவன அமைப்புமுறையால் அந்நிறுவன ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும். இவ்வாறான ஒழுங்குபடுத்தல் மூலம் ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதி செய்வதற்கு உதவுவதே சட்டம் என்ற திட்டத்தின் நோக்கமாகும். இத்தகைய சட்டத்தில் நிறைய பிரிவுகள் இருக்கின்ற. அவற்றில் ஒன்றுதான் மோட்டார் வாகனம் சட்டம் தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும். ஆகவே இந்த பதிவில் தங்களுக்கு உதவும் வகையில் மோட்டார் வாகன சட்டம் மற்றும் அபராதம் பற்றி பதிவு செய்துள்ளோம். அவற்றை படித்து பயன்பெறுங்கள்.
பழைய மற்றும் புதிய மோட்டார் வாகன சட்டம் – Motor Vagana Sattam in Tamil:
மோட்டார்_வாகன_சட்டப்பிரிவு_போக்குவரத்து_விதிமீறல்_தற்போது_விதிக்கப்படும்_அபராத_தொகை_விபரம்: முந்தைய கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்ட கட்டணமும்.
மோட்டார் வாகன சட்டம்
1 பிரிவு 177 போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம் பழைய அபராத தொகை ரூபாய் 100. புதிய அபராத தொகை ரூபாய் 500.
2 பிரிவு 177A சாலை ஓழுங்குமுறை விதிகளை மீறுதல் பழைய அபராத தொகை ரூபாய் 100. புதிய அபராத தொகை ரூபாய் 500.
3 பிரிவு 178 பயனச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது பழைய அபராத தொகை ரூபாய் 200. புதிய அபாரத தொகை ரூபாய் 500.
4 பிரிவு 179 போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறுவது பழைய அபராத தொகை ரூபாய் 500. புதிய அபராத தொகை ரூபாய் 2000.
5 பிரிவு 180 அங்கீகாரமின்றி உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் பழைய அபராத தொகை ரூபாய் 1000. புதிய அபராத தொகை ரூபாய் 5000.
6 பிரிவு 181 உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் பழைய அபராத தொகை ரூபாய் 500. புதிய அபராத தொகை ரூபாய் 5000.
7 பிரிவு 182 தகுதியிழப்பு செய்த பின்னர் வாகனத்தை ஓட்டுதல் பழைய அபராத தொகை ரூபாய் 500. புதிய அபராத தொகை ரூபாய் 10,000.
8 பிரிவு 182 B நிர்ணயிக்கப்பட்ட அளவை விட பெரிய வாகனம் புதியது ரூபாய். 5000.
9 பிரிவு 183 அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் ரூபாய் 400 ரூபாய். 1000 for LMV ரூபாய். 2000 for நடுத்தர பயணிகள் வாகனம்.
10 பிரிவு 184 அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் – ரூ 1,000 – ரூ 5,000 அபராதம். இரண்டாவது முறையும் இப்படியே செய்து சிக்கினால் உரிமம் பறிக்கப்படும்.
11 பிரிவு 185 மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல் பழைய அபராத தொகை ரூபாய் 2000. புதிய அபராத தொகை ரூபாய் 10,000. மேலும் ஒட்டுனர் உரிமம் இரத்து.
12 பிரிவு 189 சாலைகளில் வேகமாக / பந்தயத்தில் ஈடுபடுவது பழைய அபராத தொகை ரூபாய் 500. புதிய அபராத தொகை ரூபாய் 5,000.
13 பிரிவு 192 A அனுமதி (பர்மிட்) இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் பழைய அபராத தொகை ரூபாய் 5000 வரை. புதிய அபராத தொகை ரூபாய் 10,000 வரை.
14 பிரிவு 193 முகவர்கள் (உரிமம் தொடர்பான விதிமீறல்கள்) புதிய அபராதம் ரூபாய். 25,000 to ரூபாய். 1,00,000.
15 பிரிவு 194 வாகனங்களில் அதிக அளவில் சுமை ஏற்றுதல் பழைய அபராத தொகை ரூபாய் 2000 மற்றும் ரூபாய். 1000 ஒவ்வொரு கூடுதல் டன் எடைக்கும். புதிய அபராத தொகை ரூபாய் 20,000 மற்றும் ரூபாய் 2000 ஒவ்வொரு கூடுதல் டன் எடைக்கும்.
16 பிரிவு 194 A அதிக அளவில் பயணிகளை ஏற்றுதல் புதிய அபராத தொகை ரூபாய் 1000 ஒவ்வொரு கூடுதல் பயணிகளுக்கும்.
17 பிரிவு 194 B சீட் பெல்ட் போடலாம் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பழைய அபராத தொகை ரூபாய் 100. புதிய அபராத தொகை ரூபாய் 1000.
18 பிரிவு 194 C இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் பயணிகள் பழைய அபராத தொகை ரூபாய் 100. புதிய அபராத தொகை ரூபாய் 2000, ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் தகுதியிழப்பு செய்யப்படும்.
19 பிரிவு 194 D தலைக்கவசம் பழைய அபராத தொகை ரூபாய். 100. புதிய அபராத தொகை ரூபாய் 1000. ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் தகுதியிழப்பு செய்யப்படும்.
20 பிரிவு 194 E ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் இருத்தல் புதிய அபராத தொகை ரூபாய். 10,000.
21 பிரிவு 196 காப்பீடு இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் பழைய அபராத தொகை ரூபாய் 1000. புதிய அபராத தொகை ரூபாய் 2000.
22 பிரிவு 199 சிறார்கள் புரியும் போக்குவரத்து விதிமீறல்கள் காப்பாளர் / வாகன உரிமையாளர் குற்றவாளியாக கருதப்படுவார். ரூபாய். 25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை. சிறார்கள் Juvenile Justice Act படி நடவடிக்கை. வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படும்.
23 பிரிவு 206 ஆவணங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரம்.
24 சிறுவர்கள் வாகனம் இயக்கி தவறு செய்தால் – ரூ .25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 மாதங்களுக்கு மோட்டார் வாகன பதிவு ரத்து செய்யப்படும். அந்த சிறுவர் 25 வயது ஆகும்வரை, எல்.எல். கூட வாங்க முடியாது. தகுதியற்றவர்கள் பட்டியலில் வைக்கப்படுவார்கள்.
25 தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுதல் – ரூ.1000 அபராதம்; 3 மாதங்களுக்கு உரிமம் ரத்து.
ஓட்டுநர் உரிமம் ரத்து u/s 183, 184, 185, 189, 190, 194C, 194D, 194E, 210 B போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளின் போக்குவரத்து விதிமீறல்கள் சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அபராத தொகையின் இருமடங்கு அபராதம் மேற்கண்ட புதிய அபராத தொகை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளையும் சட்டத்தையும் மதித்து அவற்றைக் கடைப்பிடித்து போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடாமல் இருந்து கொள்ளுங்கள்.
EP KO 306 Section in Tamil |
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294 |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |