யோசனை என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

யோசனை வேறு சொல் | Yosanai Veru Sol

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் யோசனை என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். யோசனை என்றால் என்ன என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவ்வுலகில் யோசனை செய்யாத மனிதர்களே இல்லை. யோசனை என்பது நாம் ஏதேனும் ஒன்றினை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பது ஆகும். அதேபோல், யோசனை என்பது தூரத்தை அளக்க பயன்படுத்தப்பட்ட ஒரு வேத கால அலகாகும்.

ஆனால், இதுபற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நமக்கு தெரிந்தது எல்லாம் யோசனை என்றால் சிந்தனை என்பது தான். எதிலும் யோசித்து செயல்படு என்று பலபேர் கூற கேட்டு இருப்போம். ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பாக ஒன்றிற்கு இரண்டு முறை அல்லது பல முறை நன்கு யோசித்து முடிவு எடு என்று கூறுவார்கள். இதில் யோசனை என்பதை யோசித்து என்று கூறுவோம். இதேபோன்று, யோசனை என்ற சொல்லினை குறிக்கும் பல சொற்கள் உள்ளது. அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம்.

பிராது வேறு சொல்..!

யோசனை என்றால் என்ன.?

யோசனை என்பது குறிப்பிட்ட விஷயத்தை/செயலை நோக்கி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது ஆகும். மனதில் தோன்றிய விஷயத்தை பற்றி கற்பனை செய்வது என்றும் கூறலாம். இவ்வாறு யோசனையில் இருந்தால், சில நேரம் பிறர் கூப்பிட்டால் கூட காதில் விழாது. அந்த அளவிற்கு ஆழ்ந்த யோசனையில் இருப்போம்.

மறுபுறம், யோசனை என்பது இரு இடங்களுக்கும் இடைப்பட்ட தூரத்தினை குறிப்பிட்டு சொல்லப்படும் அளவு என்றும் கூறப்படுகிறது. அதாவது, யோசனை என்பது, பழங்காலத்தில் தூரத்தை அளக்க பயன்படுத்தப்பட்ட ஒரு வேத கால அலகாகும்.

இவ்வாறு யோசனை என்பதை இருவேறு விதமாக கூறலாம்.

யோசனை வேறு சொல்

யோசனை என்பதன் வேறு சொல் என்ன.? 

  • சிந்தனை
  • எண்ணம்
  • ஆலோசனை
  • கருத்து
  • அறிவுக் கூர்மை
  • புத்திமதி
  • அறிவுரை
  • உத்தேசம்

மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் யோசனை என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் ஆகும்.

யோசனை எடுத்துக்காட்டு வாக்கியம்:

  • எந்த செயலை செய்வதற்கு முன்பாக ஒன்றிற்கு இரன்டு முறை யோசித்து, அதன் பிறகு அந்த செயலை செய்ய தொடங்குங்கள்.
  • நம் ஊரினை நல்ல நிலைக்கு கொண்டு வர ஊர் மக்களாகிய நீங்கள் நல்லதொரு யோசனையை கூறுங்கள்.
  • ஒரு செயலை செய்ய தொடங்கும் முன், அனைத்து பக்கத்திலும் இருந்து யோசனை செய்து அதன் பிறகே செய்ய வேண்டும்.
  • ஒரு நல்ல யோசனை மட்டுமே ஒரு நல்ல வழியையும் முன்னேற்றத்தினையும் கொடுக்கும்.

மேன்மை என்பதன் வேறு சொல் என்ன.?

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement